இனி காலை 10 மணி முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும் -முழு விவரம்

மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும் என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது, மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2020, 09:30 AM IST
  • கூட்ட நெரிசல் மற்றும் சிக்கலைச்சமாளிக்க இன்று முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும்.
  • கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படும்.
  • விநியோகம் செய்ய கடைக்காரர்கள் 10 பேருக்கு மேல் ஊழியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது.
  • ஒரு நேரத்தில் விநியோகம் செய்ய 24 பாட்டில்களுக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது.
இனி காலை 10 மணி முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும் -முழு விவரம் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் மற்றும் லாக் டவுனுக்கு இடையில், மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்க கூடிய கூட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த காரணத்திற்காக, பல மாநில அரசுகள் தங்கள் உள்ளூர் மதுபான கடைகளை மூட அல்லது விலையை அதிகரிக்க முடிவு செய்தன. மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் நின்றிருந்தார்கள். இந்த நெரிசல் மற்றும் சிக்கலைச் சமாளிக்க இன்று முதல் வீட்டுக்கு மதுபானம் வழங்கப்படுகிறது.

வீட்டு விநியோகம் காலை 10 மணிக்கு தொடங்கும்:
மஹாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மதுபானம் தொடர்பாக பெரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து கடைகளையும் மூடியிருந்தது. ஆனால் இப்போது வீட்டுக்கு மதுபானம் வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் வீட்டுக்கு மதுபானம் விநியோகம் தொடங்கும் என்று மாநில அரசு தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படும்.

இந்த விதிகளை கவனித்துக் கொள்ள வேண்டும்:
அரசாங்கத்தின் உத்தரவுப்படி, விநியோகம் செய்ய கடைக்காரர்கள் 10 பேருக்கு மேல் ஊழியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்த டெலிவரி பையனும் ஒரு நேரத்தில் 24 பாட்டில்களுக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது.

மூன்றாவது ஊரடங்கு காலம்: 
நாட்டில் மூன்றாவது ஊரடங்கு காலத்தில், ​​மதுபானக் கடைகளை திறக்க மத்திய அரசாங்கம் அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதால், கடைகளுக்கு முன்பு திடீரென்று சுமார் 1 கிலோமீட்டர் தீரம் வரை நீண்ட வரிசை ஏற்பட்டது. மேலும் மதுபானக் கடைகளுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் கூடியதால், சமூக தூரம் என்பதே இல்லாமல் போனது. இதனால் பல மாநிலங்கள் மீண்டும் கடைகளை மூடிவிட்டன. 

மதுபிரியர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு மது பாட்டில்களுக்கு 70 சதவீத கொரோனா வரியையும் விதித்தது. அதேபோல தமிழகத்திலும் மதுபானம் விற்கும் டாஸ்மாக் கடைகளை இரண்டே நாளில் மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Trending News