ஹாக்கி உலக லீக் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்ற பெற்றது.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய அணிக்கான முதல் கோலை கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார். 4 பெனால்டி கார்னரை சந்தித்த போதும் இந்திய அணி அற்புதமாக ஆடி தொடர் கோல்களால் பாகிஸ்தான் அணியை ஸ்தம்பிக்க வைத்தது.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7-1 என்ற வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இதன் மூலம் இந்தியா உலக லீக் ஹாக்கி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது. இது வரை 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் கனடா அணி அயர்லாந்திடம் தோற்றது. ஜெர்மனி- அர்ஜென்டினா ஆட்டம் (4-4) டிரா ஆனது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.