ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது. இது வரை 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் கனடா அணி அயர்லாந்திடம் தோற்றது. ஜெர்மனி- அர்ஜென்டினா ஆட்டம் (4-4) டிரா ஆனது.
இந்த ஆட்டங்கள் முடிவு காரணமாக இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது. இதில் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. இன்று வெற்றி பெற்றால் பி பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும். 4-வது அணியாக அர்ஜென் டினா - அயர் லாந்து ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்கு முன்னேறும்.
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி “பீ” பிரிவில் இடம் பெற்று உள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியும் 2-2 என்ற கோல்க ணக்கில் டிரா செய்தது.2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திலும் 0-3 என்ற கணக்கிலும் 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-6 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்தது.இந்திய அணி 4-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. ஆட்டம் முடிவில் அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்திய அணி இதுவரை 4 போட்டியில் 3 தோல்வி, ஒரு டிராவுடன் ஒரு புள்ளியுடன் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது. கால் இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் நாளைய மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.