மும்பையில் உள்ள குர்லா என்ற பகுதியின் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடம் தீடிரென சரிந்ததில் தற்போது உயிர் சேதம் எதுவும் இல்லை.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரெயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.