திருமணமான பெண், மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பது (live-in relationship) தவறு என்பது மட்டுமல்ல, சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
திருநள்ளாறு கோயில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி இந்து ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் நிர்வாகம், கோவிட்-19 விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன.
இதற்கிடையே அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அதிமுக-வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
மேலும் அதிமுக-வின் இரு அணிகள் இணைந்த பின்னர் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்து வெளியேறினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த 4 அமைச்சர்களுக்கும், இதனை கண்டிக்காத தமிழக முதல்வருக்கும் ஐகோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனியார் பால் கலப்படம் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த தகவலின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் பால் கலப்பட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பால் கலப்படத்தை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன எனவும் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இவ்வழக்கில் அடுத்த விசாரணை வாரும் ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோரைக் கைது செய்வதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி நேதாஜி நகர் மசூதி அருகே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும், அங்கு தேர்தல் பணிமனை அமைத்திருந்த டிடிவி தினகரன் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.