Avaniyappuram Jallikattu: பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அமைச்சர்களான மூர்த்தி மற்றும் பிடிஆர் ஆகியோர் கோல்டு காயின்களை வாரி வழங்கினர்.
World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 66.67 % மற்றும் 152 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவும், 58.8 % மற்றும் 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவும் மோதுகின்றன
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா சிறப்பாக விளையாடிவிட்டால், இந்திய அணியின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தடுக்க முடியாது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளனர்.
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் சீன அணி மோதின. இந்த தொடர் ஜப்பானில் இன்று நடைபெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ஷுட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
ஸ்காட்லாந்த் கிளாஸ்கோ நகரில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 2வது அரையிறுதியில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, 10-வது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யூபே-வை மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிந்து அதிரடியாக ஆடினார். 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சிந்து சென் யூபே-வை 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.
ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி 'பவுலிங்' செய்கிறது.
11-வது மகளிர் உலக கோப்கை போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
11-வது மகளிர் உலக கோப்கை போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். கடந்த 15-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
இதன் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரை இறுதியில் இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
2-வது அரை இறுதியில் இந்தியா 76 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் கொண்ட இத்தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி தோற்றது. ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.