சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் போட்டியில் மும்பை அணி, குவாலிஃபையரில் சென்னை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2023, 02:27 PM IST
  • மும்பை அணி அபார வெற்றி
  • இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
  • சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி
சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி title=

ஐபிஎல் போட்டியைப்போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் மோதின. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் சீட்டில் ஆர்கஸ் அணியை எதிர்கொள்ளும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பரபரப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!

அதன்படி முதலில் களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் பாப் டூபிளசிஸ் 6 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இந்த தொடர் முழுவதும் அவர் மோசமான ஃபார்மிலேயே விளையாடிய நிலையில், இந்த போட்டியிலும் அது தொடர்ந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 38 ரன்கள் எடுக்க, மிடில் ஆர்டரில் வந்த மிலிந்த் குமார் 34 பந்துகளில் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்வரிசையில் டேவிட் மில்லர் 10 பந்தில் 17 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது.

அற்புதமாக பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் டிரண்ட் போல்ட் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கனவுடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியில் சயான் ஜஹாங்கீர் 18 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 36 ரன்கள் எடுத்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுமையாக 20 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆர்டரில் வந்த டிம் டேவிட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 20 பந்தில் நான்கு சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இன்னொரு புறத்தில் அதிரடி காட்டிய டிவால்ட் பிரிவியஸ் 33 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 41 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்றார். இதனால், 19 ஓவர்களில் இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் சீட்டில் ஆர்கஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் மோத இருக்கின்றன.

மேலும் படிக்க | எலைட் வீரர்களை சஸ்பெண்ட் செய்த ஐசிசி! அபராதம் கட்டிய கிரிக்கெட்டர்கள் பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News