ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நாகர்ஜுனா இடம்பெற்றுள்ள காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Rumors Bollywood connection with underworld: இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்கள் நிழலுலகத்துடன் தொடர்புடையவை, இவர்களில் சிலர் சிறைக்குச் சென்றவர்கள், சிலரோ உயிரை மாய்த்துக் கொண்டவர்கள்...
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் நடித்த மூத்த நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கிறார். அவர் நடிக்கும் மூத்தகுடி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தமக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் இயக்குநர் சுசி கணேசன் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு திரைத்துறையால் எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திரைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், கலைஞர்களின் கணவன் அல்லது மனைவிக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கலைஞ்ர்கள் அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஊரடங்குசெய்யப்பட்ட நிலையில், அனைத்து திரைப்படம், டிவி மற்றும் வலை தயாரிப்புகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், கலை, ஆடை மற்றும் ஒளித் துறைகளில் பணியாற்றும் ஒரு சில தொழிலாளர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்தனர்.
தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சியது மேலும் இந்த ஊழலில் சினிமா துறை சிக்கி தவிக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் கூறியது:-
தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது.
இப்பிரச்சினையைப் பொறுத்தவரை, பக்குவமடைந்த ஒருவனாக திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். அதேவேளையில், சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
தமிழக அரசின் 30% கேளிக்கை வரி விதிப்பு மூலம் தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 30% கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி உள்ள திரையங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:-
"தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.