கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு - பதிலளிக்க உத்தரவு

தமக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு  மாற்றக்கோரி கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் இயக்குநர் சுசி கணேசன் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 21, 2022, 01:30 PM IST
  • இயக்குநர் சுசி கணேசன் மீதான ‘மீ டூ’புகார்
  • வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிக்கை
  • இயக்குநர் சுசி கணேசன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு - பதிலளிக்க உத்தரவு   title=

நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மீ டூ’’ ஹேஷ்டேக்  மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டுச் சுமத்தியிருந்தார். இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அவதூறு வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

Susi Ganesan

இந்த வழக்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் இன்று முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லீனா மணிமேலை தரப்பில் வழக்கறிஞர் அபுடுகுமார் ஆஜராகி, முகநூல் பதிவுகளை ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்  வழக்கில் தொடர்புடைய 4 சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய தங்களுக்கு அனுமதி மறுத்தும் புதிய நடைமுறையை கையாண்டுள்ளதாக வாதிட்டார். மேலும், சாட்சியங்களின் வாக்குமூலங்களைச் சாட்சி கூண்டில் ஏற்றிப் பெறாமல் மனுவாக ஏற்றுக்கொண்டது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.  

மேலும் படிக்க | வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் - முதலமைச்சர் அறிவிப்பு

இதனால் நியாயமான முறையில் நடைபெறாத வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இதையடுத்து அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பும்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கும், லீனா மணிமேகலையின் வழக்கு குறித்து சுசி கணேசன் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | தமிழகம் இருளில் மூழ்கும் ஆபத்து... உடனடியாக இதை செய்யுங்கள் - அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News