உலகளவில் அதிக வெட்டுக்களை கொண்ட வைர மோதிரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த மோதிரம் 6,690 வெட்டுக்களை கொண்டது. தற்போது இந்த மோதிரம் குஜராத்தில் ஏலம் விடப்படவுள்ளது.
தாமரை மலர் போன்ற தோற்றம் கொண்ட இந்த மோதிரத்தில் 36 இதழ்கள் உள்ளது. 58 கிராம் எடை கொண்ட இதில் மோதிரத்தை விஷால் மற்றும் குஷ்பூ விஷால் தம்பதியர் வடிவமைத்துள்ளனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இந்த மோதிரத்தின் மதிப்பு ரூ.27 கோடியாகும். ஏலத்தின் ஆரம்ப விலை தற்போது வரை உறுதியாகவில்லை.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் என்பதால் இதனை வாங்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.