சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி மீது 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' முன்வைத்து, ரபேல் ஒப்பந்தத்தில் நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர்காப்பீடு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரி வைகோ தலைமையில் இன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 10 மணி அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகே, பயணிகள் விடுதி முன்பு, இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ள மானாவாரி விவசாயப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த தமிழக முதல்-அமைச்சர் பழனிச்சாமி பதவி விலகக்கோரி மதிமுக சார்பில் வரும் 21-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதைக்குறித்து அவர் முகநூலில் கூறியதாவது:-
திமுக சார்பில் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டி, வருகிற 12- ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக்குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூறி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டு இறைச்சி தடையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் நாளை( 31-ம் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதைக்குறித்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் வகையில், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டு இறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தி.மு.கழகம் தனது எதிர்ப்பினைத் தொடக்கத்திலேயே பதிவு செய்தது.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.