நடிகை குமாரி ராதா என்கிற பி.வி.ராதா அவர்கள் இன்று மரணம் அடைந்தார். ஆகஸ்டு மாதம் 1948-ம் ஆண்டு பிறந்தார். இவர் 1964-ம் ஆண்டு நவகோட்டி நாராயணா என்ற படத்தில் ராஜ்குமார் அவர்களுக்கு ஜோடியாக கன்னட படத்தில் அறிமுகமானவர் இவர்.
பி.வி.ராதா தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு உள்பட 3௦௦-க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபாலமான இவர் 69வது வயதில் காலாமாகியுள்ளர்.
பெங்களூரில் வசித்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேன்சரால் அவதிப்பட்டுவந்தார், பின்னர் கேன்சராலில் மீண்டு வந்த இவர். இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.
தமிழகம் ஆளும் அதிமுக சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பானது ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், டி.டி.வி.தினகரன் சிறை அருகே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
தமிழகம் ஆளும் அ.தி.மு.க சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.
கர்நாடகாவில் விவசாயிகள் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், மேகதாது குறுக்கே அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இதையொட்டி காலை 10 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து ஊர்வலமாக சென்று விதான சவுதாவை முற்றுகையிடுகின்றனர்.
பெங்களூர் பகுதியில் சலூன் நடந்திக்கொண்டிருக்கும் ரமேஷ் பாபுவிடம் 150 வகையான பல அரிய மாடல் கார்கள் உள்ளன.
தற்போது 45 வயதாகும் ரமேஷ் பாபுவுக்கு 9 வயதாக இருந்த போது அவரின் தந்தை இறந்து விட அவரது குடும்பம் வறுமையில் வாடத்தொடங்கியது. வறுமையால் வாடிய குடும்பத்தைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அதன் தந்தையின் தொழிலான முடி திருத்தும் வேலையை முழுநேரமாகத் தொடங்கினார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் காமராஜ் ஆகியோர் பெங்களூருக்கு சென்றுள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக அவர்கள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் சசிகலா உட்பட மூன்று பேரை சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, முதன்முறையாக அமைச்சர்கள் சசிகலாவை நேரில் சென்று சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு கர்நாடகா காவிரி நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்டன, தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். காவிரியில் செப்டம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று மேல் முறையீடு மனு மீதான விசாரணையில் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையினால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 7 ஆண்டு கால வரலாற்றில் தற்போதைய மழை பெரும் பொழிவாக இருந்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
பருவ மழை கர்நாடகாவில் 2 நாட்களாக பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதில் மைசூரு, மாண்டியா, அத்திபேலே, பெங்களூரு புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. பெங்களூருவில் பெய்த மழை 156 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் போன்களுக்கு மவுசு அதிகம். ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதை கணக்கில் கொண்டு ஆப்பில் நிறுவனம் பெங்களூரில் ஐ-போன் மேப்பிங் வசதி செய்வதற்கு வசதியாக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்க உள்ளன.
ஆப்பிள் வளர்ச்சி மையம் தொடங்க 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறார். இந்தியா வந்த டிம் குக் இதை தெரிவித்தார். மேலும் அவர் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர அதிகாரிகள் சந்திக்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.