மதுரையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முடிவுக்கு வந்தது. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் முதலிடம் பிடித்து கார் மற்றும் நான்கு பசு மாடுகளை பரிசாக வென்றார்.
பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் நடை பெறுவது வழக்கம். உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்ததோடு, சட்டமன்றத்திலும் அதனை நிறைவேற்றியது. இந்த தடை நீக்க சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் அலங்காநல்லூரில் வருகிற 10-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.
பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்திலும், பிப்ரவரி 9-ம் தேதி பாலமேட்டிலும், பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஊரை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் ஆகியோர் இருந்தனர்.
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதியும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூர் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பெண் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டிள்ளது
மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.