ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்கள் கடந்த சில காலங்களாக ஆப்கானில் வன்முறை வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறி வரும் நிலையில் அங்கு தாலிபான்களில் கை ஓங்கியுள்ளது. தாலிபன்கள் அந்தநாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஐ நா பொதுச் செயலர், இது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தாலிபான்கள், தொடர்ந்து பொது மக்கள் மீதும் வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பால்க் மற்றும் தகார் பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையம் மீது அடுத்தடுத்து மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
டேனிஷ் சித்திகி ஒரு தொலைக்காட்சி நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஒரு புகைப்பட பத்திரிகையாளரானார். டேனிஷ் 2018 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில், 100 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தலிபான்கள் இந்த படுகொலைகளை செய்ததாக சாட்டியுள்ளது.
தாலிபான் கலாச்சார ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து இமாம்களும் மதகுருக்களும் தாலிபான் வசமுள்ள பகுதிகளில் தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட விதவை பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகள் தங்கள் கட்டுபாட்டில் வந்து விட்டதாக அறிவித்த தலிபான்கள், மேலும் பல பகுதிகளை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.