தாலிபான் வசமானதா ஆப்கானிஸ்தான்; ஆப்கான் அரசு கூறுவது என்ன..!!

தாலிபான் ஆப்கானிஸ்தானின் முக்கிய  நகரமான ஜலாலாபாத்தை நகரத்தையும் கைப்பற்றியதாக செய்திகள் வந்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2021, 12:45 PM IST
  • முன்னதாக இரண்டு முக்கிய நகரங்களை கைப்பறிய தாலிபான், இப்போது ஜலாலாபாத்தையும் கைப்பற்றியுள்ளது.
  • ஆப்கான் அஷ்ரப் அதிபர் கனி சனிக்கிழமை அமெரிக்காவிடம் உதவி கோரொனார்.
  • ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்
தாலிபான் வசமானதா ஆப்கானிஸ்தான்; ஆப்கான் அரசு கூறுவது என்ன..!! title=

காபூல்: நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரம் மற்றும் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) செய்தி வெளியிட்டன.

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நான்காவது பெரிய நகரமான மசார்-இ-ஷெரிப்பின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பிறகு தாலிபான் ஜலாலாபாத்தை கைப்பற்றியுள்ளது. ஜலாலாபாத் நகரமும் தாலிபான் வசம் சென்ற பிறகு, தற்போது காபுல் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பெரிய நகரமாக உள்ளது.

அஷ்ரப் கனி அரசாங்கத்தின் முன்னாள் மூத்த ஆலோசகர், ஜலாலாபாத் நகரமும்  தாலிபான் வசம் சென்று விட்டதை உறுதிப்படுத்தினார்.  தலிபான்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள் என்று தான் நம்புவதாக  அந்த அரசு அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனம் ANI செய்தி வெளியிட்டுள்ளது.

"ஜலாலாபாத் நான் பிறந்த நகரம், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தும் தலிபான்களின் வசம் சென்று விட்டது. வியாபாரம் வழக்கம் போல் நடக்கின்றன. மேலும் தலிபான்கள் அந்த மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இறைவனும் உலகமும் அவர்களைப் பார்க்கின்றனர்  என்பதை உண்ர்ந்து, அவர் மாறி விட்டனர் என்பதை நிரூபிக்க வேண்டும் "என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் முன்னாள் மூத்த ஆலோசகர் எம். ஷபிக் ஹம்தம் கூறினார்.

ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு

முன்னதாக சனிக்கிழமையன்று, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவருக்கு காபூல் மற்றும் அண்டை மாகாணங்களின் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமெரிக்க பொறுப்பாளர் ரோஸ் வில்சன் மற்றும் அமெரிக்கப் படைகளின் தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர், இருவரும் ஆப்கானியப் படைகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

ஆப்கானிஸ்தான் வன்முறை அதிகரித்து வருகிறது. தலிபான்கள் ஆப்கான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை முன்னதாக, தனது குடிமக்களுக்கு உறுதியளித்த ஆப்கான் அரசு, வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து  ஸ்திரத்தன்மை ஏற்படுவதை உறுதி செய்யும் என கூறியிருந்தார் "தற்போதைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை" என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் மீது சுமத்தப்பட்ட  போரின் காரணமாக,  கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு, நிலைமை கட்டுக்கு அடங்கமால் செல்வதை தடுப்பேன் எனவும் நிலைமை மோசமடைய அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் மேலும் உறுதி கூறினார்.

ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News