ராஜஸ்தானின் ஜலவார் பகுதியில், நேற்று இரவு டிராக்டர் ஒன்று குடியிருப்பினில் நுழைந்ததில் 3 குழந்தைகள் பலியாகினர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் பகுதியில், டிராக்டர் ஓட்டுனர் ஒருவரு குடித்துவிட்டு வாகனத்தை ஒட்டியதில் தவறுதலாக குடியிருப்பு ஒன்றில் வாகனத்தினை விட்டார்.
Rajasthan: 3 children dead after an allegedly drunk tractor driver drove into a house last night in Jhalawar; Bodies sent for post-mortem pic.twitter.com/XnYVN5UI2r
ராஜஸ்தானில் பரான் பாடசாலையில் மதிய உணவு வழங்கபட்ட பொது உணவை சாப்பிட்ட 60 குழந்தைகளுக்கு உணவு விஷமாகி உள்ளன.
இந்த உணவை தொழிலதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளும் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது
அறுவை சிகிச்சை தியேட்டருக்குள், சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது இரு டாக்டர்கள் இடையே வாக்குவாதம் செய்து, சண்டையிட்டு கொண்ட சம்பவம் ராஜஸ்தான் ஜோத்பூரில் அரங்கேறி உள்ளது.
ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில், பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அப்போது அறுவை சிகிச்சை தியேட்டருக்குள் டாக்டர்கள் இருவர் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதும், அவர்களை அருகில் இருந்த சக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சமாதானம் செய்வதும் நடந்துள்ளது.
இந்திய நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியிடப்பட்டது. அதன்படி 272 வாக்குகள் வித்தியாசத்தில் துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் நான்கு கால்களுடன் ஓர் அதிசிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நான்கு மருத்துவர்கள் கொண்ட மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்றியுள்ளனர்.
கால்களின் கூடுதல் மூட்டுகளை அகற்றியபிறகு, குழந்தை இப்போது நன்கு குணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீடியோவை காண:-
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய போலீஸார் கைது செய்தனர்.
மிக குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.
ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர் சென்னையில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
சென்னை மண்ணடியில் செல்போன் கடை வைத்திருக்கும ஹாரூன், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது ராஜஸ்தான் சிறையில் உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரை ஒன்று காருக்குள் பாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் சாலை ஓராமாக தனது குதிரையை கட்டி விட்டு அதற்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகாமாக இருந்ததால் அந்த குதிரை கயிற்றை அற்றுவிட்டு சாலையில் ஓடத்தொடங்கியது.
சாலையில் ஓடிய அந்த குதிரை முதலில் பைக் ஒன்றின் மீது மோதியது. பின்னர் அந்த சாலையில் வந்த காரின் முன்பக்க வழியாக பாய்ந்தது. இதனால் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் திருமண மண்டபத்தில் உள்ள 90 அடி நீளமும், 13 அடி உயரமும் கொண்ட சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கியும், கூட்ட நெரிசலில் மிதிபட்டும் 4 குழந்தைகள் உள்பட 23 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.
27 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு ஒருவாரம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதாவது:- டெல்லியில் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் ஒருவாரம் தடை விதித் துள்ளது. அத்துடன் விவசாய கழிவுகளை எரிக்காமல் அப்புறப்படுத்த பஞ்சாப் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? விவசாய கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு உத வி தொகை ரூ1,000 கொடுத்தால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியது கேள்வி எழுப்பி உள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மறைந்த நிர்வாகி ஷங்கர் சவதாஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் அர்விந்த் கெஜ்ரிவால். ஆறுதல் கூறிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிய போது திடீரென ஒருவர் அவர் மீது மை வீசினார். மை வீசியாவரின் பெயர் தினேஷ் ஓஜா ஆகும்.
பின்னர் தினேஷ் ஓஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பரதீய ஜனதாவுடன் தொடர்புடைய அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணும் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என கூறிவருகிறது.
இந்நிலையில் தாக்குதல் குறித்து குடியரசு தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய சிறப்பு படை எப்படி தாக்குதல் நடத்தியது என தற்போது தெரியவந்துள்ளன.
ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவ வீரர்கள் 3 கிலோ மீட்டர் ஊடுருவி 8 முறை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 7 பயங்கரவாத முகாமகள் பலத்த சேதம் அடைந்தன.
இந்த தாக்குதலை பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி ஆகியோர் கண்காணித்து வந்துள்ளனர்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கை இயக்குநர் ஜெனரல் ரன்பீர்சிங் இன்று அறிவித்தார்.
உரி ராணுவ முகாம் மற்றும் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.