தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களை வணங்குகிறேன். எண்ணிலடங்கா தொழிலாளர்களின் உழைப்பே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
Today, on Labour Day we salute the determination & hardwork of countless workers who play a big role in India's progress. Shrameva Jayate!
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இன்று மே தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் வாழ்த்து:
உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம் என்ற ஜெயலலிதாவின் வாக்கை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ்:
தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மே தினத்தையொட்டி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகெங்கும் வாழும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவருடைய வாழ்த்து அறிக்கையில்:-
"உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாம் மே தின நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மே தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.