தலைவர்கள் மே தின வாழ்த்து

Last Updated : May 1, 2017, 09:06 AM IST
தலைவர்கள் மே தின வாழ்த்து title=

இன்று மே தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் வாழ்த்து:

உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம் என்ற ஜெயலலிதாவின் வாக்கை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவர்னர் வித்யாசாகர் ராவ்:

சக்கரம் போல் இயங்கிக்கொண்டு இருக்கும் மதிப்பிற்கும், மரியாதையுக்கும் உரிய தொழிலாளர்களுக்கு எனது  மனமார்ந்த தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் பாதுகாப்பும்  கிடைக்க வேண்டும். 

ஓ.பன்னீர்செல்வம்:

உழைக்கும் மக்களின் சிறப்பினை அகில உலகிற்கும் எடுத்துக்காட்டும் நாளாக ‘மே தினம்’  கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் புனிதப் பாதையில் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள், தங்களது வாழ்வில் அனைத்து வளங்களையும்,  நலங்களையும் பெற்று வாழவேண்டும்.

மு.க.ஸ்டாலின்:

தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருநாவுக்கரசர்: 

உலகத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிகண்ட நாளாக மே 1 கொண்டாடப்பட்டு வருகிறது. 

ராமதாஸ்:

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து  உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889ம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மே 1-ம் தேதி உழப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

விஜயகாந்த்:

உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என்று மே தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்:

உலக தொழிலாளர் தினம் மே 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் இந்நாளை, தன் நலன் காக்கும் நாளாக கருத வேண்டும்.

Trending News