சென்னையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரயில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இதை கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
தமிழர்களுக்கு ஆசி நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் என்று தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணித்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனை வழிபட்டு நன்றி செலுத்துவர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (இன்று) அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. போகி என்றால் போகங்களை அனுபவிப்பவன் அதாவது எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பவன் என்று பொருள்.
இந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.