தமிழகத்தில் பனிமூட்டம்- முடங்கியது விமானம், ரயில் சேவை!

சென்னையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரயில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jan 13, 2018, 09:31 AM IST
தமிழகத்தில் பனிமூட்டம்- முடங்கியது விமானம், ரயில் சேவை! title=
சென்னையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரயில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு நடத்தி வருகிறது. புகைமூட்டத்தின் காரணத்தால் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடுபவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். 
 
சென்னை விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இதனால் அவை பெங்களூருக்கு திருப்பிவிடபட்டன. மேலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 8 மணிவரையில் புறப்படவில்லை.
 
இதனையடுத்து சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

Trending News