சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்து பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
சில காலங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு சமூகவலைத்தளத்திலிருந்து வெளியேறினார். அந்த வகையில் நடிகர் சிம்பு நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ பார்க்க.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். அந்தவகையில் அவரி பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.
பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன். இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி.
கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். வழக்கம் போல அவர் இந்த நாளில் நலத்திட்ட உதவிகள் நற்பணி இயக்கத்தினர்.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
"நாளை என்பது மற்றுமொரு நாளே வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம் வேலைவருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்," என்று தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்தின் பலம் அவரது ரசிகர்கள். மேலும் நடிகர் அஜித்தை பெருமைப் படுத்தும் வகையில் தற்போது அவர் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் உதாரணமாக இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் பல்வேறு புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டது. அதில் இடம்பெற்ற ஒரு தமிழ் வார்த்தை தான் ‘அண்ணா’.
அண்ணா வார்த்தைக்கு மூத்த சகோதரர் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அதற்கு உதாரணமாக விவேக் ஓப்ராய் ஒரு பேட்டியில் கூறிய ‘I got to act with Ajith anna’ என்ற வாசகம் உதாரணமாக இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் திபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
மெர்சல் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா இல்லையா என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.
நடிகர் விஜய் வசந்த்தின் அடுத்தப் படம் மை டியர் லீசா என்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நிழல்கள் ரவி நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் மை டியர் லிசா. இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகியும், இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றவை.
மை டியர் லீசா என்ற பெயரிலே நடிகர் விஜய் வசந்த் நடிக்க உள்ளார். இதில் விஜய் வசந்த்க்கு ஜோடியாக சாந்தினி மற்றும்
ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இசை டி.எம் .உதயகுமார், ஒளிப்பதிவு ஜெய்சுரேஷ், இப்படத்தை ரமேஷ் ரெட்டி தயாரிக்க உள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஏற்கனவே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனி கோட்டையை நோக்கி பயணிப்போம் என கூறியிருந்தார். நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை தனது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
வரைவில் தமிழக அரசியல் களம் காண உள்ள இரு பெரும் நடிகர்கள், நண்பர்களான கமல் மற்றும் ரஜினி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வருகிறார் என செய்திகள் வந்தது. அதனையடுத்து, அவரது ரசிகர்களை சந்தித்த போது போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என தனது அரசியல் பிரவேசத்தை குறித்து கருத்து தெரிவித்தார். பிறகு பல தலைவர்கள் அவரை சந்தித்து பேசினார்கள்.
சென்னை-28, கோவா, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜெய் மற்றும் பிரேம்ஜி அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் மோதி அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியாது
ஜெய் மற்றும் பிரேம்ஜி குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் குடித்து விட்டு காரை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த விசாரித்த போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்பட 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி அதிரடியாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசம் அனுபவித்து வரும் திலீப் அங்கமாலி கோர்ட் மற்றும் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக திலீப்புக்கு 2 மணிநேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
77 வயதான நடிகர் சண்முக சுந்தரம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அண்மை காலமாக உடல்நிலை பாதுப்பு மிகவும் மோசமாக அடைந்ததால் அவர் இன்று காலமானார்.
இவர் பிரபல குணச்சித்ர நடிகராக வலம் வந்தவர். 100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்துள்ளார். இவர் ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமானர். கடைசியாக இவர் நடித்த படம் சிம்புவின் AAA ஆகும்.
கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ஒருமுறை நடிகர் பரணியை பார்த்து 'சேரி பிகேவியர்' என கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த சமூகத்தை இழிவுபடுத்தும்படி பேசிய காயத்ரி, தொகுத்து வழங்கிய கமல், அந்த வார்த்தையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது 100 கோடி ருபாய் நஷ்டஈடு தரவேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த மே மாதம் 28-ம் தேதி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
இதற்காக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 27-ம் தேதி மும்பைக்கு சென்றார். அங்கு 11 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும் ஜூன் 8-ம் தேதி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.
‘காலா’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கடந்த மாதம் 22-ம் தேதி மாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். மும்பையில் 5 நாள் படப்பிடிப்புக்கு பின்னர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.
திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.