நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை. அதனால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்கின்றன என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்.
“தமிழகம் சமூகநீதியின் தொட்டில்; அதை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுவதை திமுக ஒருக்காலும் அனுமதிக்காது” என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு முரசொலி பவள விழா கண்காட்சியின் அரங்கை பார்வையிட்டு நெகிழ்ந்தார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டாக காலமாக கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முரசொலி மாறன் பிறந்த நாள் அன்று முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். தற்போது உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை வரவேற்று அழைத்து சென்றனர்.
தொண்டையில் செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஆர்வமுடையவர் கருணாநிதி. மூத்த அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், அற்புதமான கதாசிரியராக திகழ்பவர். சினிமாவில் கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். அவரின் வசனம் என்பது திரைத்துறையில் நுழைய அனுமதி சீட்டு போன்றது.
கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்ஜிஆரும் போனில் அழைத்து பாராட்டினார். அதே போல தசாவதாரம் படத்தின் போது எனது கன்னத்தை கிள்ளி பாராட்டு வழங்கியவர் கலைஞர் கருணாநிதி.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, விரைவில் நலம்பெற வேண்டுவதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்றி இரவு உடல்குறைவு காரணத்தால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலத்துடன் உள்ளதாக, மருத்துவமனை தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.