முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கையில் மு.க.ஸ்டாலின் அமர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது...!
நேற்று நடந்த தி.மு.க பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டார். தனது 14 வயதில் கட்சிப் பணியாற்ற வந்த ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு துரை முருகன் தி.மு.க-வின் பொருளாளராகவும் அறிவிக்கப் பட்டார். இருவரும் பொதுச் செயலாளர் க.அன்பழகனிடம் வாழ்த்துப் பெற்றனர்.
பிறகு ஏற்புரை ஏற்ற ஸ்டாலின், 'கட்சிக் கொள்கைகளிலிருந்து தி.மு.க ஒரு போதும் தடம் புரளாது' எனத் தெரிவித்தார். அதன் பிறகு தனது சகாக்களுடன் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.
இதை தொடர்ந்து, அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி இருக்கையில் மு.க.ஸ்டாலின் அமர்ந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு ஸ்டாலினின் மகன் உதயநிதி, ''முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் இடத்தில் எங்கள் தலைவர்! என் உயிர் தோழனுடன்!" எனக் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் இடத்தில் எங்கள் தலைவர் ! என் உயிர் தோழனுடன்! pic.twitter.com/77Qu0kcW4a
— Udhay (@Udhaystalin) August 28, 2018