திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்ற வெகுநாட்கள் இல்லை என H.ராஜா ட்விட்டரில் பதிவிட்டது அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தான் கூறிய கருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜி.ராமகிருஷ்ணனுக்கு தனது கண்டத்தை பதிவு செய்துள்ளார்.
எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல் ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன் நேற்று எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியார்களிடம் கூறியது:
காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த 23-10-2017 அன்று விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பேரறிவாளன் விடுதலை பெரும் வரை, அவரது சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
மெர்சல் திரைப்படத்திற்குக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, அப்படத்தின் வசனத்தை நீக்கக்கோருவதையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சோளங்குருணி என்ற ஊரில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்குகிறது. இங்கு சுமார் 250 மாணவ மாணவிகள் கல்வி பயிலுகிறார்கள்.
இந்தப்பள்ளியில் அடைப்படைவசதிகளான கழிவறைகள், அதற்கான தண்ணீர் வசதி போன்றவைகள் ஏதுமற்ற நிலையில் இங்கு பயிலும் மாணவ மாணவிகள் அவதியுறுகிறார்கள் என்பதை அறிந்து இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தென் மண்டல நாம்தமிழர் கட்சி சார்பில் செய்து கொடுக்க முடிவு செய்து அதற்கான களப்பணிகளில் இறங்கியுள்ளனர்.
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 113-ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27-09-2017) புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று 5 மணிக்கு மழலையர் பாசறை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சி அறிவிப்பில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.