தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளவு பட்டுள்ள இரு அணிகளையும் மீண்டும் இணைப்பது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக என்பது எம்ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கிய கட்சி இது ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் செல்லக்கூடாது என்பது தொண்டர்களின் எண்ணம். சசி அணி தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு எங்களை சந்தித்தால் நாங்கள் பேச்சு நடத்த தயார்.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் வருகின்றன. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா ஆதரவு பெற்ற டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
அதிமுக-வுக்கு 2 அணி நிர்வாகிகளும் சொந்தம் கொண்டாடிய நிலையில், ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னதாக அதிமுக-வும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டது.
இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்கேநகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் சிக்கின. அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான தீர்மானத்துக்கு விளக்கம் அளித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகன சேவையையும் தொடங்கி வைத்தார். தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை வாகன சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
ரூ111,03 மதிப்பிலான திட்டங்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.3.04 கோடி மதிப்பிலான உபகரணங்களை தீயணைப்பு துறைக்கு வழங்கினார். வணிக வரித்துறை வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கப்பலில் இருந்த கசடு எண்ணெய் கடலில் கசிந்தது. கடற்கரைகளில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.