பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை.
புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 89.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் 89.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 93.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 80.21% தேர்ச்சி விகிதத்துடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடம் பெற்றுள்ளது. பிளஸ் 2 தேர்விலும் கடைசி இடம் பிடித்த மாவட்டம் விழுப்புரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 1 பொதுத் தேர்வில்
500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் - 30,380 பேர்
451 - 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர்
426 - 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர்
401 - 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர்
351 - 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர்
இன்று வெளியான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக
இயற்பியல் - 93 %
வேதியல் - 92.7%
உயிரியல் - 92.6%
தாவரவியல் - 89.3%
விலங்கியல் -91.8%
கணிதம் - 92.5%
கணினி அறிவியல் - 95.3%
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு இணையத்தில் வெளியானது. இதில் மொத்தம் 91.3 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.3 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக அரசு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல 11 ஆம் வகுப்புக்கும் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இதனால் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.
11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 8 லட்சத்து 61 ஆயிரம் மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளிலும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் அறியலாம்.
ஜூன் 4ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் 11 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு வரும் ஜூலை 5ம ஆம் தேதி தொடங்கும் எனவும், இதுக்குறித்து முழுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.