காலா படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

தவறான கருத்துகளை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முறையீடு செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Jun 5, 2018, 12:59 PM IST
காலா படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!  title=

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. 

இந்நிலையில், காலா திரைப்படத்தின் கதை களத்தில், மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடாரை இழிவுப்படுத்து போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் நாடார் என்பவர் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர், தவறான கருத்துகளை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.101 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Trending News