CBSE 1,2-ம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்கள் என்.சி.இ.ஆர்.டி பாடப்புததகங்களை வைத்து மட்டுமே பாட எடுக்க வேண்டும் என்றும் தடையை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கில்...!
சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் உள்ள பாடங்களைத்தான் நடத்த வேண்டும். ஆனால் சில தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள், ஆனால் சில தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள், மாணவர்களுக்கு கொடுத்து, மன அழுத்தமும் அதிக சுமையை தூக்கும் நிலையும் உருவாகிறது. அதேபோல் தான், என்.சி.இ.ஆர்.டி விதிகளின்படி 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,, தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை மட்டுமே கற்பிக்க வேண்டும். தேவையற்ற பாடங்களை கற்பிக்கக்கூடாது. தனியார் பதிப்பக புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.