ஸ்ரீ ரெட்டி மீதான தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம்!

ஸ்ரீ ரெட்டி-க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் தற்போது நீக்கியதாக உள்ளதாக அறிவித்துள்ளது.

Last Updated : Apr 14, 2018, 03:54 PM IST
ஸ்ரீ ரெட்டி மீதான தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம்!  title=

தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில், நடிகைகள் தங்கள் கர்ப்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. தெலுங்கு திரையுலகில் திறமையான நடிகைகள் இருந்தாலும் மும்பையில் இருந்து நடிகைகள் கொண்டுவரப்படுவதற்கான காரணத்தை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினார் தெலுங்கு நடிகை ஸ்ரீ-ரெட்டி.  

இதை தொடர்ந்து, நடிகை ஸ்ரீ ரெட்டி ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துவரும் பிரபலங்கள் மீது ஆதாரத்துடன் கூடிய குற்றங்களை இணையத்தில் தெரிவித்துவந்தார். இதனால், தெலுங்கு நடிகர் சங்கம் இவரை சங்கத்திலிருந்து நீக்கியது மட்டும் இன்றி படங்களில் நடிக்கவும் தடைவிதித்தது. இதனை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீ ரெட்டிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆதராவானார்கள். பல பெண்கள் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என ஸ்ரீ ரெட்டி-க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஸ்ரீ ரெட்டி-க்கு மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் அளியுங்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெலுங்கானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டி பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர் 20 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதில் 10 பேர் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். 10 பேர் பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

இந்த அமைப்பானது தனது விசாரணையை துவங்கி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கி உள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா பேசுகையில்...! 

ஸ்ரீ ரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதால் அவர் மீதான தடை நீக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கலாம்" என தெரிவித்துள்ளார்!

Trending News