ஜூலை 15-16 Amazon Prime Day Sale: ஏகப்பட்ட சலுகைகள்.. ஷாப்பிங்குக்கு ரெடியா?

Amazon Prime Day Sale: அமேசானின் இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இந்த சேலுக்கான தேதிகளை அமேசான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2023, 06:08 AM IST
  • இந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • பல புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்படும்.
  • அமேசான் சாதனங்களில் சிறந்த சலுகைகள்.
ஜூலை 15-16 Amazon Prime Day Sale: ஏகப்பட்ட சலுகைகள்.. ஷாப்பிங்குக்கு ரெடியா? title=

அமேசான் ப்ரைம் டே விற்பனை: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! அமேசான் தனது பிரைம் டே விற்பனையை (Amazon Prime Day sale) அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த விற்பனை ஜூலை 15-16 தேதிகளில் நடைபெறும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், அணியக்கூடிய பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவார்கள். வங்கி சலுகைகளைப் பொறுத்தவரை, அமேசான் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதில் 10 சதவீத சேமிப்புகளை அறிவித்துள்ளது.

அமேசானின் இந்த விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இந்த சேலுக்கான தேதிகளை அமேசான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கும் இந்த விற்பனையில் மலிவான விலையில் பொருட்களை வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த பதிவில் இந்த விற்பனையின் முக்கிய அம்சங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும்

வரவிருக்கும் விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ( OnePlus 11R 5G), ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14), சாம்சங் கேலக்சி எஸ்20 எஃப்இ (Samsung Galaxy S20 FE), ஐக்யூ00 11 5ஜி (iQOO 11 5G), ரெட்மி 12சி (Redmi 12C), சாம்சங் கேலக்சி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G), ரியல்மீ நார்ஸோ என்53 ( Realme Narzo N53), ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஆகியவற்றில் சலுகைகள் கிடைக்கும் என்று அமேசான் விற்பனை முன்னோட்டப் பக்கம் வெளிப்படுத்துகிறது. நோட் 12 5ஜி (Note 12 5G), லாவா ப்ளேஸ் 5ஜி (Lava Blaze 5G), டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9), ஓப்போ ஏ78 5ஜி ( Oppo A78 5G) மற்றும் இன்னும் பல மொபைல் ஃபோன்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | திடீரென பேஸிக் பிளானை ரத்து செய்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்பிளிக்ஸ்!

பல புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்படும்

பிரைம் டே விற்பனையின் போது புதிதாக அறிமுகம் ஆகவிருக்கும் பல ஸ்மார்ட்போன்களும் அமேசானின் முதல் விற்பனையில் கிடைக்கும். OnePlus Nord 3 5G ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கும். மேலும் Samsung Galaxy M34 5G இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு அமேசான் பிரைம் டே விற்பனையின் போது விற்பனைக்கு வரும். அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இப்போது அனைத்து வகையான ஊபர் ரைடுகளிலும் 5 சதவீத தள்ளுபடியைப் பெறலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 5 சதவீதத்தில், 4 சதவீதம் உபெர் கேஷாகவும், 1 சதவீதம் அமேசான் பே வாலட்டிலும் டெபாசிட் செய்யப்படும்.

அமேசான் சாதனங்களில் சிறந்த சலுகைகள்

அமேசான் பிரைம் டே விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் எக்கோ (அலெக்சாவுடன்), ஃபயர் டிவி மற்றும் கிண்டில் சாதனங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் கூறுகிறது. Amazon Dot 4th Gen ஸ்மார்ட் ஸ்பீக்கரின் அசல் விலை ரூ. 4,499. இது குறைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,249 -க்கு கிடைக்கும் என்று அமேசான் விமர்சனப் பக்கம் தெரிவிக்கிறது. எல்இடி டிஸ்ப்ளே கொண்ட எக்கோ டாட் 4வது ஜெனரேஷனின் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.4,499 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | ஜூலையில் வரும் சாம்சங் காலக்ஸி M34... அசத்தும் கேமரா, பேட்டரி, டிஸ்பிளே - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News