Jan 1 முதல் Whatsapp இந்த phone-களில் இயங்காது: உங்க phone list-ல இருக்கா?

வரவிருக்கும் புத்தாண்டில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் Whatsapp நிறுத்தப்படும் என்ற பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2020, 06:24 PM IST
  • வழக்கமாக புதிய ஆண்டு துவக்கத்தில் Whatsapp பழைய இயக்க முறைகளில் தன் இயக்கத்தை நிறுத்தும்.
  • இந்த புத்தாண்டிலும் சில போன்களில் Whatsapp-ன் இயக்கம் நிறுத்தப்படும்.
  • உங்கள் ஃபோனில் எந்த இயக்க முறை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Jan 1 முதல் Whatsapp இந்த phone-களில் இயங்காது: உங்க phone list-ல இருக்கா? title=

புதிய ஆண்டு மலரப்போகிறது. புதிய ஆண்டுடன் பல பழைய விஷயங்கள் விடப்படும். நம் வாழ்வின் ஒரு இன்றியமையாத அம்சமாகிவிட்ட Whatsapp-பிற்கும் அது பொருந்தும். புதிய ஆண்டு துவங்கியவுடன், Whatsapp பழைய இயக்க முறைகளில் தன் இயக்கத்தை நிறுத்தி விடுவது வழக்கமாகும்.

வரவிருக்கும் புத்தாண்டிலும், எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் Whatsapp நிறுத்தப்படும் என்ற பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. IOS 9 மற்றும் Android 4.0.3 இயக்க முறைமைகளுக்கு கீழே உள்ள ஸ்மார்ட்போன்களில் Whatsapp இயங்காது.

நிறுவனம் கூறுகையில், Whatsapp-ன் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த, iPhone பயனர்கள் iOS 9 அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் Android பயனர்கள் பதிப்பு 4.0.3 அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் Whatsapp எந்த ஸ்மார்ட்போன்களில் இயங்குவதை நிறுத்திவிடும் என்பதை இங்கே காணலாம்.

iPhone-களின் இந்த மாடல்களில் Whatsapp இயங்காது

Apple-ன் iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6 மற்றும் iPhone 6S ஆகியவை இயக்க முறைமை iOS 9 உடன் புதுப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது. இருப்பினும், iPhone 6S, 6 Plus, மற்றும் iPhone SE ஆகியவற்றை iOS 14 உடன் புதுப்பிக்க முடியும்.

ALSO READ: Whatsapp Pay ‘Live’ ஆனது: Whatsapp மூலம் பணம் அனுப்பும் வழிமுறைகள் உள்ளே

இந்த Android தொலைபேசிகளிலும் Whatsapp இயங்காது.

Android 4.0.3-ல் இயங்காத ஸ்மார்ட்போன்களில் Whatsapp இயங்காது. இந்த ஸ்மார்ட்போன்களில் HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr, Samsung Galaxy S2 போன்ற மாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பல பயனர்களுக்கு தங்கள் தொலைபேசி எந்த இயக்க முறைமையில் இயங்குகிறது என்பதே தெரியாது. ஆகையால், அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் உங்களுக்குச் சொல்கிறோம்.

iPhone மற்றும் Android பயனர்கள் இந்த வழியில் இதை கண்டறியலாம்

முதலில் Setting-க்குச் செல்லவும். பின்னர் General-ல் டேப் செய்யவும். இப்போது நீங்கள் Information-ல் டேப் செய்தவுடன் உங்கள் இயக்க முறைமை (Operating System) பற்றிய விவரங்களைப் பெறுவீர்கள். நீங்கள் Android பயனராக இருந்தால், முதலில் Setting-க்குச் சென்று, About Phone-ல் சென்று தொலைபேசியின் இயக்க முறைமை பற்றி அறிந்து கொள்ளலாம். 

ALSO READ: Whatsapp மூலம் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா? இதைச் செய்தால் போதும்

Trending News