WhatsApp Three Red Ticks: வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிக்கிறதா

Whatsapp செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்களை மத்திய அரசு கவனிப்பதாக கூறும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2021, 06:51 PM IST
  • வாட்ஸ்அப் மூன்று ரெட் டிக்ஸ் செய்தி
  • மூன்று சிவப்பு டிக் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன
  • வாட்ஸ்அப்பில் போலி செய்திகளைப் பற்றி இன்ஸ்டன்ட் மெசேஜ்
WhatsApp Three Red Ticks: வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிக்கிறதா title=

வாட்ஸ்அப்பில் சிலர் ஒரு சில போலியான செய்திகளை அனுபி வருகின்றனர். இது போன்ற போலி செய்திகளில் கடுமையான கட்டுப்பாடு வைத்த பிறகும், தொடர்ந்து வாட்ஸ்அப்பில் போலி செய்திகள் பகிரப்படுகின்றன. அந்தவகையில் தற்போது இந்த செய்தி தளம் ஒரு புதிய டிக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

பொதுவாக வாட்ஸ்அப் (Whatsapp) செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றதும் இரண்டு டிக்குகள் காணப்படும். அதனை அவர்கள் படித்துவிட்டால் இரு டிக்குகளும் புளூ நிறத்திற்கு மாறிவிடும். தற்போது இந்த டிக் முறையில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. 

ALSO READ | இந்தியாவில் செயல்பட இந்திய சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்: Whatspp-க்கு இந்திய அரசு பதிலடி

அதன்படி, அனுப்பிய குறுந்தகவல்களுக்கு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த புதிய டிக் உண்மையா அல்லது போலியானது என்பதை நிரூபிக்க PIB Fact Check தகவலை வழங்கி உள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் செயலியில் புது டிக் முறை அமலுக்கு வந்துள்ளது என வைரல் துளியும் உண்மையில்லை. மேலும் அரசாங்கம் இதுபோன்ற எதையும் செய்யவில்லை. என்று குறிப்பிட்டு உள்ளது. ஏற்கனவே பலமுறை இதேபோன்ற தகவல் வைரலாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News