குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் சுமார் 89சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் 1 சதவீத மக்கள் கணினியில் பயன்படுத்துவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.
தற்போது வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டெக்ஸ்ட் வசதி, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் ஆகிய சேவைகள் மட்டுமின்றி தற்போது குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், அதிகபட்சமாக நான்கு பேருடன் மட்டுமே வாய்ஸ் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பேச முடியும் என்பது கவனிக்கத்தக்கது.