WhatsApp Update: வாட்ஸ் அப் ஆனது க்ரூப் அட்மின்கள் மற்றும் தனது வழக்கமான பயனர்களுக்கான புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் சேனல் மூலம் அப்டேட் குறித்து தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட்டுகளை செய்வதன் மூலம் பயனர்களுக்கு வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது மிகவும் எளிமையானதாக இருக்கும். புதிய அப்டேட்டின்படி, தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட இப்போது க்ரூப்பில் நபர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்பதை வாட்ஸ் அப் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்! அரசே கண்டுபிடித்து குடுக்கும்!
தற்போது, வாட்ஸ்அப் ஒரு க்ரூப்பில் 512 உறுப்பினர்கள் வரை இருக்க மட்டுமே அனுமதிக்கிறது, ஆனால் இனிமேல் வாட்ஸ் க்ரூபில் 1024 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ் அப் க்ரூப் அட்மின்களுக்கு சில மேம்பட்ட பிரைவசி கட்டுப்பாடுகளை வழங்குவதற்காகவும் சில ஆப்ஷன்களை சேர்த்து வாட்சப்பை மேம்படுத்தியிருக்கிறது. இந்த அம்சத்தின் மூலமாக வாட்ஸ் அப் க்ரூப்பில் யாரெல்லாம் சேரமுடியும் என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மேலும் அட்மின்கள் இன்வைட் லிங்குகளை உருவாக்கி மற்ற பயனர்களுக்கு அனுப்பி குழுக்களில் சேர கோரலாம்.
இதன் மூலம் குழுவின் அட்மின்கள் தங்களது குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், சேரக்கூடாது என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் அதிக குழுக்களில் இருக்கும் பயனர்கள், தங்களது நண்பர்களும் அந்தந்த குழுக்களில் இருக்கிறார்களா என்பதை தேடி தெரிந்துகொள்ள முடியும். வாட்ஸ்அப்பில் குழுக்களுக்கு வாட்ஸ் அப் கடந்த சில மாதங்களில் பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் தேவையற்ற செய்திகளை அனுப்பினால் அதனை குழுவின் அட்மின் டெலீட் செய்யலாம். இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப் அதன் புதிய அப்டேட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கூகுள் நிறுவனத்துக்கு எதிராக கூகுள் பார்ட்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ