மாஸ் அப்டேட்... வாட்ஸ்அப் வாய்ஸ் காலில் இத்தனை பேரை சேர்க்கலாமா!

Whatsapp Desktop App: விண்டோஸ்-களுக்கும் வாட்ஸ்அப் சேவையை நீட்டிக்க அந்நிறுவனம், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பெறும் நன்மைகளை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 23, 2023, 08:30 AM IST
  • இதுவும் மொபைல் ஆப்பை போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • மொபைல், டேப்லட், மடிக்கணினி, டெஸ்க்டாப் என பல சாதனங்களையும் இணைக்கலாம்.
மாஸ் அப்டேட்... வாட்ஸ்அப் வாய்ஸ் காலில் இத்தனை பேரை சேர்க்கலாமா!  title=

Whatsapp Desktop App: பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப் குழுக்களுக்கான புதிய அம்சங்களை அறிவித்துள்ளார். இந்த அப்டேட், வாட்ஸ்அப் குழுவில் யார் சேரலாம் என்பதில் அட்மின்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதோடு, மக்கள் குழுவில் சேருவதை எளிதாக்கும். "புதிய அப்டேட், நீங்கள் ஒருவருடன் பொதுவான குழுக்கள் என்ன என்பதைக் கண்டறிவதை எளிதாக்கும்" என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்

மேலும், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சேவையையும் இன்று முதல் அளிப்பதாக மெட்டா தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. அதில்,"இன்று, விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்அப் செயலியை அறிமுகப்படுத்துகிறோம். அது விரைவாக செயல்படும். இந்த ஆப்பும், மொபைல் பதிப்பைப் போன்றே கட்டமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இப்போது எட்டு நபர்களுடன் குழு வீடியோ கால்களையும், 32 பேர் வரை ஆடியோ கால்களையும் மேற்கொள்ளலாம். இந்த வரம்புகளை காலப்போக்கில் தொடர்ந்து அதிகரிப்போம். இதன் மூலம் நீங்கள் எப்போதும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்.

மொபைல் போன்கள், கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பலவற்றிற்கு இடையே குறுக்கு-தளத்தில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் முழுமையான End-to-End என்க்ரிப்ட் செய்யப்பட்ட செய்தி அனுபவத்தை வழங்குவதற்கான மிகப்பெரிய தளமாக WhatsApp உள்ளது. உங்கள் தனிப்பட்ட செய்திகள், மீடியா மற்றும் அழைப்புகள் எப்போதும் உங்கள் எல்லா சாதனங்களிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

புதிய பல சாதன திறன்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து, சாதனங்களை வேகமாக இணைத்தல் மற்றும் சாதனங்கள் முழுவதும் சிறப்பாக ஒத்திசைத்தல், அத்துடன் இணைப்பு மாதிரிக்காட்சிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்ற புதிய அம்சங்கள் உட்பட மேம்பாடுகளைச் செய்துள்ளோம்.

வாட்ஸ்அப்பை ஆதரிக்கும் சாதனங்களின் எண்ணிக்கையை நாங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கும் தற்போது பீட்டாவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மேக் டெஸ்க்டாப்புகளுக்கும் புதிய வாட்ஸ்அப் பீட்டா அனுபவத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் வாட்ஸ்அப்பை இன்னும் பல சாதனங்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்" என்றார்.  

வாட்ஸ் குழு அப்டேட்ஸ்

அதுமட்டுமின்றி, வாட்ஸ்அப் குழு சார்ந்த பல புதிய அப்டேட்களை மார்க் ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பிராட்காஸ்ட் சேனலில் அறிவித்தார். குழுக்கள் என்பது வாட்ஸ்அப்பின் இன்றியமையாத பகுதியாக தொடர்கிறது. இதனால், வாட்ஸ்அப் இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவர முனைகிறது. இந்த மாற்றங்கள் கடந்த சில மாதங்களில் செய்யப்பட்ட சில அப்டேட்களை பின்பற்றி வருகின்றன. வாட்ஸ்குழுக்களின் உறுப்பினர்களை பெரிதாக்குவது மற்றும் அட்மின்கள் தாங்கள் நிர்வகிக்கும் குழுக்களில் அனுப்பப்பட்ட செய்திகளை நீக்கும் திறனை வழங்குவது உட்பட பல அப்டேட்கள் சமீபத்தில் வந்தது.

மேலும் படிக்க | கூகுள் நிறுவனத்துக்கு எதிராக கூகுள் பார்ட்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

"கடந்த ஆண்டு, வாட்ஸ்அப்பில் மக்கள் தங்கள் குழுக்களைப் பயன்படுத்துவதற்கு உதவுவதற்காக நாங்கள் வாட்ஸ்அப் கம்யூனிட்டியை உருவாக்கினோம். அதனை அறிமுகப்படுத்தியதில் இருந்து, அட்மின்கள் மற்றும் பயனர்களுக்காக இன்னும் அதிகமான சேவைகளை உருவாக்க விரும்புகிறோம். இன்று சில புதிய அப்டேட்களை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குழுக்களை நிர்வகிக்க அட்மின்களுக்கு கூடுதல் செயல்பாடுகளையும், அனைவருக்கும் எளிதாக குழுக்களை எடுத்துச் செல்லவும் மாற்றங்களைச் செய்துள்ளோம்" என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.

வாட்ஸ்அப் குழு: அட்மின்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

அதிகமான மக்கள் வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் சேருவதால், குழு அட்மின்களுக்கு வாட்ஸ்அப் அவர்களின் குழு தனியுரிமை (Privacy) மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. ஒரு குழுவில் யார் சேர முடியும் என்பதை நிர்வாகிகள் தீர்மானிக்கும் திறனை வழங்கும் எளிய வழியை (Tool) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

வாட்ஸ்அப் குழு: பொதுவான குழுக்களை எளிதாகப் பார்க்கலாம்
 
வாட்ஸ்அப் கம்யூனிட்டி, அவற்றின் பெரிய குழுக்களின் வளர்ச்சியுடன், நீங்கள் ஒருவருடன் எந்தெந்த குழுக்களைப் பொதுவாகக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதை வாட்ஸ்அப் எளிதாக்குகிறது.

"உங்கள் தொடர்பில் இருக்கும் ஒருவரும் (Contact), நீங்களும் வாட்ஸ்அப் குரூப்களில் ஒன்றாக இருக்கிறீர்கள். அது உங்களுக்கு தெரிந்தாலும் அல்லது நினைவில் இல்லையெனினும், நீங்கள் இருவரும் இருக்கும் பொதுவான குழுக்களைப் பார்க்க விரும்பினால் நீங்கள் இப்போது அந்த காண்டாக்டின் பெயரை எளிதாகத் தேடலாம்" என்று ஜூக்கர்பெர்க் தெரிவித்தார். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சங்கள் வரும் வாரங்களில் உலகளவில் வெளிவரத் தொடங்கும்.

மேலும் படிக்க | மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்! அரசே கண்டுபிடித்து குடுக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News