புத்தாண்டில் காலடி எடுத்துவைத்த நாளை அடுத்து தற்போது, சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னதாகவே வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்ததாவது... டிசம்பர் 31-ம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை கீழ்காணும் இயங்குதளத்திற்கு நிறுத்தப்படும் என அறிவிதிருந்தது. அந்தவகையில்
- பிளாக்பெரி ஓ.எஸ்
- பிளாக்பெரி 10
- விண்டோஸ் போன் 8.0
உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் சேவை நிறுத்தப்பட்டது!
அதேபோல், இந்தாண்டு டிசம்பரில் "Nokia S40" இயங்குதளத்தில் நிறுத்தப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து Android OS version 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் பிப்ரவரி 1, 2020-க்குப் பின்னர் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது எனவும் அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்கில் நோக்கியா எஸ்60 தளங்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்ககது.
வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்ட தளங்களில் பட்டியல்:-
- ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் பழைய பதிப்பு
- விண்டோஸ் போன் 7
- ஐபோன் 3GS / iOS 6
- நோக்கியா சிம்பியன் S60