ஸ்னாப் இன்க் (Snap Inc) நிறுவனத்திற்கு சொந்தமான மல்டிமீடியா மெசேஜிங் செயலியான ஸ்னாப்சாட்டின் தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை, (daily active users (DAUs)) 150 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது, புகைப்பட-செய்தி பயன்பாடான ஸ்னாப்சாட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 60 மில்லியனைக் கடந்துவிட்டது.
2011 ஆம் ஆண்டில் இவான் ஸ்பீகல், பாபி மர்பி மற்றும் ரெகி பிரவுன் (Evan Spiegel, Bobby Murphy, Reggie Brown) ஆகியோரால் நிறுவப்பட்டது Snapchat. இந்திய சந்தையில் ஸ்னாப்சாட்டின் கவனம் 2018 முதல் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையில் 40% அதிகரித்த பிறகு ஸ்னாப்சாட் நிறுவனம் ஆகஸ்ட் 2019 இல் மும்பையில் ஒரு அலுவலகத்தைத் திறந்தது.
தயாரிப்பு மேம்பாடு, கூட்டாண்மை மற்றும் வளர்ந்த ரியாலிட்டி அனுபவம் ஆகியவற்றில் வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து உருவாக்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்னாப் இன்க் நிர்வாக இயக்குனர் நானா முருகேசன் (Nana Murugesan) கூறுகிறார்.
Also Read | Pornhub 9 மில்லியன் வீடியோக்களை நீக்கியது ஏன்?
இதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயனர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்னாப்சாட் பெருமளவில் நீக்கியது நினைவிருக்கலாம். தற்போது, புகைப்படங்களையும், வீடியோக்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஸ்னாப்சாட்அனுமதிக்கிறது. ஸ்னாப்சாட், filter-கள் மற்றும் லென்ஸ்களையும் வழங்குகிறது.
உலகளவில், டிசம்பர் 2020 காலகட்டத்தில் முடிவடைந்த காலாண்டில் தினசரி 265 மில்லியன் செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருந்தது ஸ்னாப்சாட். பயனர்களால் சராசரியாக 5 பில்லியனுக்கும் அதிகமான 'ஸ்னாப்கள்' உருவாக்கப்பட்டன.
"2020 எங்களுக்கு மிகவும் வலுவான ஆண்டாக இருந்தது, நாங்கள் பார்க்கும் வேகத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Q4 20 இல் இந்தியாவில் 60 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை நாங்கள் அடைந்தோம், ஆண்டு முழுவதும் வளர்ச்சியை வலுப்படுத்தினோம், மேலும் எங்கள் சமூகம் அனைத்து பகுதிகளிலும் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஸ்னாப்சாட் உரையாடல் முதல் உள்ளடக்கத்தை உருவாக்குவது வரை, எங்கள் கேமராவைப் பயன்படுத்தி லென்ஸ் ஸ்டுடியோவுடன் படைப்பாற்றல் பெறுவது"என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றதாக முருகேசன் கூறினார்.
அதோடுஆக்மென்ட் ரியாலிட்டி (augmented reality (AR)) பயன்படுத்தி மக்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள், மகிழ்விக்கப்படுகிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், உலகை அனுபவிக்கிறார்கள் என்பதில் ஸ்னாப்சாட் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR