ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு பொதுவாக எந்த போனை வாங்க வேண்டும்? எவ்வளவு ரேமில் வாங்க வேண்டும்? என்ற சந்தேகம் இருக்கும். அதிகமாக ரேம் இருந்தால் தான் அந்த போன் நல்லது என யோசித்து வாங்குபவர்களும் உண்டு. ஆனால், அந்த எண்ணம் தவறானது. உங்களுடைய பணி என்ன? என்பதைப் பொறுத்து நீங்கள் ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது தான் ஸ்மார்ட்டான முடிவு.
மேலும் படிக்க | OPPO A77 5G: குறைந்த விலையில் அட்டகாசமான போனை அறிமுகம் செய்தது ஓப்போ
2ஜபி ரேம் முதல் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வரை ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்பதை பொறுத்து அதிக ஜிபி கொண்ட RAM போனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைவான பிரௌசிங், மெசேஜஃ மற்றும் அழைப்புகளுக்கு மட்டுமே நீங்கள் போனை பயன்படுத்துவீர்கள் என்றால், குறைவான ரேமில் இருக்கும் போனை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் போதுமானது.
யூ டியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் 4 ஜிபி முதல் 6 ஜிபி ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அதிகம் கேம் விளையாடுபவர் என்றால் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம்களைக் கொண்ட போன்களை வாங்கலாம். ஏனென்றால் பப்ஜி உள்ளிட்ட அதிக கிராபிக்ஸ் கொண்ட விளையாட்டுகளுக்கு 8 ஜிபியில் இருக்கும் போன்கள் தான் சரியாக இருக்கும். ஹேங்க் ஆகாமல் சரியாக செயல்படும். யூசர்களுக்கும் அது சூப்பரான அனுபவத்தைக் கொடுக்கும. கேம் விளையாடாதவர்களுக்கு 4 ஜிபி இருந்தால்போதும்.
இன்றைய ஸ்மார்ட் உலகத்தில் 2 ஜிபி ரேம் கொண்ட போன்கள் சரியாக வேலை செய்யாது. அல்லது எதிர்பார்க்கும் வேகம் அந்த மொபைல்களில் இருக்காது. உங்களின் மொபைல், வேலைகளுக்கு ஏற்ப சரியாக வேலை செய்யாதபோது, அதனைவிட அதிக ரேம் கொண்ட மொபைல்களை நீங்கள் பரிசீலிக்க தொடங்குவது நல்லது. ஏனென்றால், உங்களின் பயன்பாட்டுக்கு அந்த மொபைல் சரியில்லை என்பதை, ஸ்லோவாக வொர்க் ஆகும்போதே புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்போன் - ரெடியா மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR