வோடபோன் இந்தியாவின் 'சூப்பர் பிளான்கள்' திட்டத்தின் கீழ் ஐந்து வெவ்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது, டேடா, எஸ்எம்எஸ், வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய வாடிக்கையாளர் சேவைகளுக்கான புதிய சேவையை வழங்குகிறது.
சூப்பர் திட்டத்திற்கான வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ 509-க்கு நாள் ஒன்றுக்கு 1GB டேடா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், 84 நாட்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை இலவசமாக பெறுவார்கள்.
அதே போன்று, ரூ. 458 க்கு 70 நாள் மற்றும் ரூ. 347, 28 நாள்களுக்கு பெறுவார்கள்,.மேலும் குறைந்த பட்சம் ரூ. 199, 28 நாள் மற்றும் ரூ 79, 7 நாள் பெறுவார்கள்.
ரூ. 347 திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற ரோமிங், வரம்பற்ற குரல் அழைப்புகள் (STD & Local) மற்றும் 1.5 GB ஜிபி இலவச டேடா ஒவ்வொரு நாளும் 28 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ. 458 மற்றும் 509 ரூபாயாக இருந்தாலும், குரல் அழைப்பு, எஸ்.டி.டி., ரோமிங், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா ஆகியவற்றில் விரிவான திட்டங்கள் உள்ளன.
இந்தத் திட்டங்களை கடைகளிலும், MyVodafone என்ற மொபைல் பயன்பாடு மூலம் வாடிக்கையாளர்கள் வசதியை பெற முடியும்.