Vodafone Idea Recharge Plans: வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் சில புதிய சலுகைகளை வழங்குகிறது. Vi தனது ரூ. 219 ப்ரீபெய்ட் திட்டத்துடன் 2 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த சலுகை Vi App அல்லது myvi.in இணையதளத்தில் உள்ளது. Vi பொதுவாக இந்த திட்டத்துடன் ஒரு நாளைக்கு 1GB தரவை வழங்குகிறது. வோடபோன் ஐடியா இப்போது ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரூ .20 தள்ளுபடி கூப்பனையும் வழங்குகிறது. Vi வலைத்தளத்தின் படி, தள்ளுபடி கூப்பன் அடுத்த ரீசார்ஜில் பயனர்களுக்கு கிடைக்கும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் கூடுதல் நன்மைகளுடன் பிஞ் ஆல் நைட், ஸ்ட்ரீமிங், நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரை ஸ்ட்ரீமிங் மற்றும் இணைய உலாவல், வார இறுதி டேட்டா ரோல்ஓவர், Vi Movies மற்றும் டிவி கிளாசிக்ஸிற்கான அணுகலையும் வழங்குகிறது.
இதற்கிடையில், ஜியோ இந்தியாவில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் கேஷ்பேக் வழங்கத் தொடங்கியுள்ளது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் புதிய கேஷ்பேக் சலுகை ரூ .249, ரூ. 555 மற்றும் ரூ .599 ஆகிய மூன்று ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கிறது.
ALSO READ: இந்தியா விரைவில் 6G அறிமுகம்! 6ஜி நெட்வர்க்கின் அம்சங்கள் இது தான்!!
ஏர்டெல் Vs ஜியோ Vs Vi-யின் ரூ .200 க்கும் குறைவான திட்டங்கள்
Vi 148 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 1 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு ஆகிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் 18 நாட்களுக்கு செல்லுபடியாகும். Vi ரூ 199 திட்டத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் (Airtel) 149 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அமேசான் பிரைம் அணுகலுடன் 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியும் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் 1 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. கூடுதல் நன்மைகளில் அமேசான் பிரைம், விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவை அடங்கும்.
ஜியோ (Jio) 149 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில், 24 நாட்களுக்கான செல்லுபடி, வரம்பற்ற அழைப்பு வசதி, 1 ஜிபி தினசரி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளுக்கான அணுகல் ஆகியவை கிடைக்கின்றன. ஜியோவின் 199 ரூபாய் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 1.5 ஜிபி தினசரி தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஜியோ செயலிகளுக்கான அணுகல் கிடைக்கும்.
ALSO READ: Jio, Airtel மற்றும் Vi சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: பல நன்மைகளைப் பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR