குறைந்த விலையில் டேட்டாவை அள்ளி கொடுக்கும் வோடாஃபோன் ஐடியா

வோடாபோன் தீபாவளி ஆஃபரை அறிவித்துள்ளது. குறைந்த விலையில் டேட்டாவை அள்ளி கொடுக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 18, 2022, 02:14 PM IST
குறைந்த விலையில் டேட்டாவை அள்ளி கொடுக்கும் வோடாஃபோன் ஐடியா title=

Vodafone Idea Diwali Offer 2022: Vodafone Idea, 2022 ஆம் ஆண்டிற்கான தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை 18 அக்டோபர் முதல் 31 அக்டோபர் 2022 வரை பொருந்தும். இந்த புதிய தீபாவளி சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பெறுவார்கள். இவை புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அல்ல. ஏற்கனவே உள்ள திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை சேர்த்துள்ளது. 

வோடபோன் ஐடியா தீபாவளி ஆஃபர் 2022

வோடபோன் ஐடியா மொத்தம் மூன்று திட்டங்களை தீபாவளி சலுகையாக குறிப்பிடுகிறது. ஆனால் நிறுவனம் வெளியிட்டுள்ள சலுகையின் பேனரில் இரண்டு திட்டங்கள் மட்டுமே தெரியும். இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு மூன்று திட்டங்களுடன் கூடுதல் டேட்டாவை பெறலாம். 

ரூ.1449 திட்டம்:

வோடபோன் ஐடியாவின் ரூ.1449 திட்டத்தில், அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், 1.5ஜிபி தினசரி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் பெறுவார்கள். இந்த திட்டத்தில் வேலிடிட்டி சேவை 180 நாட்களாகும். Vi Movie மற்றும் TV VIP அணுகலுடன் அனைத்து Vi Hero அன்லிமிடெட் பலன்களும் கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில், பயனர்கள் 50 ஜிபி கூடுதல் டேட்டாவை பெறுவார்கள்.

மேலும் படிக்க | மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்

ரூ 2899 திட்டம்:

Vi வழங்கும் ரூ.2899 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்பு, 1.5GB தினசரி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 SMS பெறுவார்கள். 365 நாட்கள் செல்லுபடியாகும். Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies மற்றும் TV VIP சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது 75GB போனஸ் டேட்டா கிடைக்கும்.

ரூ.3099 திட்டம்:

வோடபோன் ஐடியாவின் ரூ.3099 திட்டம் நீண்ட கால வேலிடிட்டியை விரும்புபவர்களுக்கானது. இந்த திட்டத்தில், பயனர்கள் 365 நாட்கள் சேவை செல்லுபடியாகும், 2GB தினசரி டேட்டா, 100 SMS/நாள், அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்பு, Vi Hero அன்லிமிடெட் பலன்கள், Vi Movies & TV VIP, Disney+ Hotstar மொபைல் ஒரு வருடத்திற்கு மற்றும் 75GB போனஸ் டேட்டா கிடைக்கும். இந்த மூன்று திட்டங்கள் தான் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இவை அனைத்தும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.

மேலும் படிக்க | உங்கள் பேஸ்புக் தகவல் திருடப்பட்டிருக்கிறதா? தெரிந்து கொள்ள ஈஸியான வழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News