Vodafone Idea (Vi) செவ்வாய்க்கிழமை இரண்டு புதிய RedX குடும்பத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை ரூ .1,699 மற்றும் ரூ .2,299 ஆகும். இந்த திட்டத்தின் மூலம், ரூ .1,699 பிளானில் 3 குடும்ப உறுப்பினர்களையும் ரூ .2,299 பிளானில் 5 குடும்ப உறுப்பினர்களையும் சேர்க்க முடியும்.
வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) மல்டி மெம்பர்ஸ் ஆர்இடிஎக்ஸ் திட்டத்தின் தனித்துவமான விஷயம் அதன் லாக்-இன் பீரியட் ஆகும். அதாவது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு இந்தத் திட்டங்களில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களை இடையில் விட்டுவிட்டால், அவர்களிடமிருந்து வெளியேறும் கட்டணமாக 3,000 ரூபாய் வசூலிக்கப்படும்.
நிறுவனம் சொன்னது என்ன
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா அளித்துள்ள அறிக்கையில், 'பல குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்து வேலை, ஆன்லைன் கல்வி, பொழுதுபோக்கு மற்றும் சமூக ஊடக பயன்பாடு (Social Media) ஆகியவற்றுக்காக அதிக தரவைப் பயன்படுத்துகின்றனர். இந்த திட்டம் இவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வரம்பற்ற தரவு கிடைக்கும். இதன் கட்டணத்துக்கான பில்லும் ஒன்றுதான் வரும்.’ என்று கூறியுள்ளது.
ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா
வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்
புதிய ரெட்எக்ஸ் குடும்பத் திட்டத்துடன், நெட்ஃபிக்ஸ் ப்ரைமரி மெம்பர் (ஓராண்டு சந்தாவுடன்), 1 வருடத்திற்கான அமேசான் பிரைம், 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி மெம்பர்ஷிப், வி.ஐ மூவிஸ் மற்றும் டிவி ஆகியவற்றுக்கான விஐபி அணுகல் போன்ற ஓ.டி.டி தளங்களுக்கான மெம்பர்ஷிப் கிடைக்கும். இதனுடன், Zee5 பிரீமியத்திற்கான அணுகலும் கிடைக்கும்.
வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்
ஒவ்வொரு இணைப்பிலும் வரம்பற்ற 4 ஜி டேட்டா (Data) கிடைப்பதோடு, புதிய ரெட்எக்ஸ் குடும்பத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் ப்ரைமரி மற்றும் செகண்டரி எண்களில் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகின்றன. வோடபோன் ஐடியா அதன் போட்டியாளரான பாரதி ஏர்டெல் நிறுவனத்தைப் பின்பற்றி, தனது கார்பரெட் வாடிக்கையாளர்களுக்கு பிசினஸ் பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் டேட்டா நன்மைகளைக் குறைத்த சில நாட்களிலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ALSO READ: Vodafone Idea: அட்டகாசமான திட்டங்களை அறிமுகம் செய்தது நிறுவனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR