Vivo X80-ல் கிடைக்கிறது பம்பர் தள்ளுபடி: முழு விவரம் இதோ

Vivo X80 Price offer: நிறுவனம் 8 ஜிபி ரேம் போனை ரூ. 54,999 மற்றும் 12 ஜிபி ரேம் மாறுபாட்டை ரூ 59,999 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 19, 2022, 03:50 PM IST
  • விவோ அதன் பிரீமியம் அம்சமான விவோ எக்ஸ்80 தொடரை மே 19 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • விவோ எக்ஸ்80 மற்றும் விவோ எக்ஸ்80 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் மே 25 ஆம் தேதி தொடங்கும்.
  • புகைப்படம் எடுப்பதற்காக, இந்த ஸ்மார்ட்போனில் 4 பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Vivo X80-ல் கிடைக்கிறது பம்பர் தள்ளுபடி: முழு விவரம் இதோ title=

விவோ எக்ஸ்80 சலுகை: விவோ அதன் பிரீமியம் அம்சமான விவோ எக்ஸ்80 தொடரை மே 19 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் உள்ள நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்களில் விவோ எக்ஸ்80 மற்றும் விவோ எக்ஸ்80 ப்ரோ ஆகியவை அடங்கும். 

நிறுவனம் விவோ எக்ஸ்80 ப்ரோவை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை 79,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது தவிர, நிறுவனம் விவோ எக்ஸ்80- ஐ 8ஜிபி + 128ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி ஆகிய இரண்டு விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 

நிறுவனம் 8 ஜிபி ரேம் போனை ரூ. 54,999 மற்றும் 12 ஜிபி ரேம் மாறுபாட்டை ரூ 59,999 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

முதல் விற்பனை எப்போது தொடங்கும்
விவோ எக்ஸ்80 மற்றும் விவோ எக்ஸ்80 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் மே 25 ஆம் தேதி தொடங்கும். பயனர்கள் அவற்றை பிளிப்கார்ட், விவோ இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்கலாம்.

எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்
வாடிக்கையாளர்கள் ஃபோனை ஆன்லைனில் முன்பதிவும் செய்யலாம். இதில் 10% வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும். எச்டிஎஃப்சி, சிடி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கார்டுகளை வைத்திருக்கும் பயனர்கள் இந்த கார்டுகளில் தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, இந்த இரண்டு சாதனங்களையும் நீங்கள் எச்டிஎஃப்சி வங்கி அட்டைகள் மூலம் ஆஃப்லைனில் முன்பதிவு செய்தால், 7,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

விவோ எக்ஸ்80 ப்ரோ: விவரக்குறிப்புகள்

- விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120Hz புதுப்பிப்பு வீதம் இருக்கும்.

- இதில் 1,440×3,200 பிக்சல் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் உள்ளது. 

- கூடுதலாக, இதில் 6.78 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

- இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் 'ஹேக்' செய்து விட்டார்களா? உடனே Recover செய்வது எப்படி?

- பவர் பேக்கப்பிற்காக 4,700எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

- இதில் 80W ஃபிளாஷ் சார்ஜ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

- இது 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கும்.

- புகைப்படம் எடுப்பதற்காக, இந்த ஸ்மார்ட்போனில் 4 பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

- இதில் 50எம்பி சாம்சங் ISOCELL GNV முதன்மை சென்சார் உள்ளது.

- விவோ எக்ஸ்80 ஆனது 48எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் கொண்டுள்ளது.

- 12எம்பி போர்ட்ரெய்ட் சென்சார், 8எம்பி அல்ட்ரா டெலிஃபோட்டோ லென்ஸும் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.

- செல்ஃபி எடுக்க, இதில் 32எம்பி முன்பக்க கேமரா அமைப்பு உள்ளது. 

விவோ எக்ஸ்80: விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிடி 9000 செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6.78 இன்ச் முழு எச்டி + அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 1,080×2,400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. இதில், புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் , 50எம்பி சோனி IMX866 RGBW முதன்மை சென்சார் உள்ளது. 2எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 12எம்பி போர்ட்ரெய்ட் சென்சாரும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. போனின் முன்பக்க கேமரா 32எம்பி கொண்டிருக்கும். பவர் பேக்கப்பிற்காக 80W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி இதில் வழங்கப்படும்.

மேலும் படிக்க | 5G Phones: ரூ.20,000-க்குள் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News