ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் Vi-ன் 2 சூப்பரான பிளான்கள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் 2 சூப்பரான பிளான்களை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 5, 2022, 05:46 PM IST
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் Vi-ன் 2 சூப்பரான பிளான்கள்  title=

வோடபோன் ஐடியா எப்போதுமே குறைந்த விலை திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கிறது. இது அதிக டேட்டா மற்றும் பல OTT தளங்களுக்கான சலுகையை கொடுக்கிறது. இப்போது நிறுவனம் இரண்டு பிக் பேங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும். அவற்றின் விலை ரூ.2,999 மற்றும் ரூ.2,899 மட்டுமே. இதில் அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது. 

வோடபோன் ஐடியா ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ஓராண்டு திட்டங்களை பல கொண்டுள்ளது. இப்போது இந்த பட்டியலில் மேலும் இரண்டு திட்டங்கள் சேர்ந்துள்ளது. வோடபோன் ஐடியாவின் ரூ.2999 திட்டத்தில் 850 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது தினசரி டேட்டா வரம்பு திட்டம் இல்லாமல் வருகிறது. திட்டத்தில் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் கிடைக்கும். 

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் பயனர்கள் உஷார்: ஹேக்கர்கள் இப்படி அடேக் செய்யக்கூடும்

வோடபோன் ஐடியா ரூ.2899 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.2899 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 365 நாட்களுக்கு திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் கிடைக்கும். மேலே உள்ள திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்திலும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டா கிடைக்கும். இது வார இறுதி தரவு டேட்டா ரோல் ஓவர் திட்டமாகும். இது மாதத்திற்கு 2ஜிபி பேக்கப் டேட்டாவுடன் வருகிறது.

ஓராண்டு டேட்டா திட்டம்

இந்த இரண்டு திட்டங்களைத் தவிர, 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.3,099 திட்டத்தை Vi கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர வரம்பற்ற அழைப்பு வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு Disney + Hotstar மொபைல் சந்தாவும் கிடைக்கும்.

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? இந்த மாசமே வாங்குங்க!! மாருதியில் டிசம்பர் மாதம் எக்கச்சக்க தள்ளுபடிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News