வெறும் ரூ. 500-க்கு Kodak ஸ்மாரட் டிவி: பிளிப்கார்ட் அதிரடி, முந்துங்கள்

Flipkart Electronics Sale: 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. கோடாக்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.500க்கு இந்த விற்பனையில் வாங்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2022, 03:10 PM IST
  • பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது.
  • இந்த விற்பனை மே 24 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்த விற்பனையில் ஒரு பரிமாற்ற சலுகையும் உள்ளது.
வெறும் ரூ. 500-க்கு Kodak ஸ்மாரட் டிவி: பிளிப்கார்ட் அதிரடி, முந்துங்கள் title=

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை மே 24 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. 

இந்த பிளிப்கார்ட் விற்பனையில், ஸ்மார்ட் டிவி அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றது. மக்கள் ஸ்மார்ட் டிவி-களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. கோடாக்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.500க்கு இந்த விற்பனையில் வாங்கலாம். இவ்வளவு குறைவான விலையில் ஸ்மார்ட் டிவி-ஐ வாங்கும் செயல்முறையை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | கூகுள் ஹிஸ்டிரியை ரகசியமாக வைப்பது எப்படி? இதோ டிப்ஸ் 

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: கொடாக் 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
கொடாக் 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவின் அறிமுக விலை ரூ.18,499 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த டிவி ரூ.11,499க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவியில் முழுதாக 37% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், அதாவது ஒரு பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது. இதன் காரணமாக டிவி-யின் விலை இன்னும் குறைகிறது. 

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: கோடாக் 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் சலுகை

கோடாக் 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.10,975 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், இந்த சலுகையை பெற, உங்கள் பழைய டிவி நல்ல நிலையில் இருப்பதும் சமீபத்திய மாடலாக இருப்பதும் அவசியமாகும். அப்போதுதான் ரூ.10,975-க்கான தள்ளுபடியை பெற முடியும். இந்த சலுகையை முழுமையாக பெற முடிந்தால், டிவியின் விலை ரூ.524 ஆக குறையும். 

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை: கோடாக் 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வங்கி சலுகை

நீங்கள் பழைய டிவியை மாற்ற விரும்பவில்லை என்றால், டிவியில் வங்கி சலுகையும் கிடைக்கும். கோடாக் 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க, ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆர்பிஎல் பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1,150 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு டிவியின் விலை ரூ.10,349 ஆக குறையும்.

மேலும் படிக்க | Meta 3D Avatar புதிய முப்பரிமாண மெட்டாவின் அவதாரை உருவாக்குவது சுலபம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News