கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருந்த மக்களுக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது வீடியோ கேமிங்ஸ் மட்டுமே. அதனால், 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய கேம்களின் வரவுகள் மிகப்பெரிய அளவில் இருந்தது. மேலும், ஏற்கனவே இருந்த கேம்களும் மிகவும் பாப்புலரானது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு கேமிங் துறைக்கு டிரெண்ட்செட்டராகவும் அமைந்தது. அதனால், இந்த ஆண்டில் டிரெண்ட் செட்டை மாற்றிய சில கேம்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
கால் ஆஃப் டூட்டி: மொபைல்
(Call Of Duty: Mobile)
கால் ஆஃப் டூட்டி: மொபைல் கேம், கடந்த சில ஆண்டுகளாகவே யூசர்களை மிகவும் கவர்ந்த வீடியோ கேமாக இருந்து வருகிறது. கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர் என இரண்டிலும் கிடைக்கும், கால் ஆஃப் டூட்டி: மொபைல், 2021-ல் ஒரு புதிய டிரெண்ட் செட்டராக மாறியது என கூறலாம். ஷூட்-டு-சர்வைவ் கேமான இது, FPS மற்றும் PvP பயன்பாடுகளுக்காக மிகவும் பிரபலமானது.
PUBG மொபைல் நியூஸ்டேட்
(PUBG Mobile New State)
பப்ஜி மொபைல் கேமுக்கு இந்தியாவில் இருந்த வரவேற்பை பற்றிக் கூறத்தேவையில்லை. ஆனால், இதில் இருந்த சில ஆபாச உருவங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததாலும், அரசியல் காரணங்களுக்காகவும் சீன கேமான இது தடை செய்யப்பட்டது. இதனையடுத்து கிராப்டன் நிறுவனம், இந்தியாவுக்காக பிரத்யேகமாக வடிவமைத்த பப்ஜி மொபைல் நியூ ஸ்டேட் கேமை வெளியிட்டது. இதுவும் கேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்தது.
ALSO READ | குஷ்பு 2.0: அன்று கொண்டையில் தாழம்பு, இன்று கொண்டையில் பாம்பு!!
GRID ஆட்டோஸ்போர்ட்
(GRID Autosport)
கார் ரேஸ் கேம்களை விரும்புபவர்களுக்கு மிகச்சிறந்த மற்றும் புதிய கேம் GRID Autosport. இந்த கேம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே ஏகோபித்த வரவேற்பு காரணமாக ஒரு டிரெண்ட்செட்டராக இருந்து வருகிறது. GRID Autosport கேமின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், விளையாட்டுக்கு தேவையானதை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கேம் விளையாடும்போது விளம்பரங்கள் இருக்காது. கூடுதலாக, சிறந்த கிராபிக்ஸ் விளையாடுபவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கரேனா ஃப்ரீ ஃபயர்
(Garena Free Fire Max)
இந்தியாவில் PUBG மொபைல் தடைசெய்யப்பட்ட பிறகு, உடனடியாக பிரபலமான ஒரு கேம் என்றால் Free Fire. அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் சிறந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட ஃப்ரீ ஃபயர் மேக்ஸை கரேனா நிறுவனம் வெளியிட்டது. இந்த கேம்மை எத்தகைய ஸ்மார்ட்போன்களில் வேண்டுமானலும் விளையாட முடியும். உயர்ரக ஸ்மார்ட்போன்களில் மட்டுமே விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சில கேம்களுக்கு மத்தியில், Free Fire Max கேம் யூசர்களை வெகுவாக கவர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
போகிமான் கோ
(Pokémon Go)
2016 ஆம் ஆண்டில் Pokemon Go வந்தபோது, AR கேம்களில் என்ன செய்ய முடியும்? என்பதை மறுவரையறை செய்தது. இந்த கேம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகள் ஆனபோதும், கொரோனா லாக்டவுன் காலத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கேம்களுக்கு இணையாக, இந்த கேமும் யூசர்களை வெகுவாக ஈர்த்தது. பலரும் இந்த கேமை விளையாடினர்.
ALSO READ | ’விவாகரத்து கொடுத்தது குத்தமா?’ 8,000 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஆஸ்திரேலியர்
பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா
(Battlegrounds Mobile India)
கிராப்டன் நிறுவனத்தால் 2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு கேமான பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா, இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பப்ஜி மொபைலில் கிடைத்த அனுபவத்தை, இந்த கேம் யூசர்களுக்கு கொடுத்தது. அதேநேரத்தில், அந்த கேமை விட இந்தகேம் சற்று வித்தியாசமானது.
இவை தவிர, கேண்டி க்ரஷ் சாகா, கிளாஷ் ஆஃப் க்ளான்ஸ், ரோப்லாக்ஸ், மைன்கிராஃப்ட், கிரிஸ் உள்ளிட்ட கேம்களும் யூசர்களை வெகுவாக கவர்ந்தவையாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR