ஆப்பிள் ஐபோன் இல்லை... இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்...

Most Expensive Smartphones: விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2024, 11:47 AM IST
  • நடுத்தர மக்கள் பலரும் ப்ரீமியம் போன் வாங்குவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.
  • போனின் விலைகளை கேட்டால், நிச்சயம் ஷாக் ஆவீர்கள்.
  • உலகின் மிக விலையுயர்ந்த ஐந்து தொலைபேசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் ஐபோன் இல்லை... இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்... title=

ஸ்மார்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர, சந்தையில் தினம் தினம் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும். பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் உள்ள தரம் மற்றும் சிறந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அதனை விரும்பி வாங்கும் பல உள்ளனர். 

இன்றைய காலக்கட்டத்தில், இஎம்ஐ கடன் போன்ற வசதிகள் கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலரும் ப்ரீமியம் போன் வாங்குவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகின் மிக விலையுயர்ந்த ஐந்து தொலைபேசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

உலகின் ஐந்து விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் ஐபோன்கள் இல்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதோடு, நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களின் விலைகளை கேட்டால், நிச்சயம் ஷாக் ஆவீர்கள். இதனை வாங்குவதற்கு முன் கண்டிப்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

Xiaomi Redmi K20 Pro

ஜியோமி ரெட்மீ K20 Pro சிக்னேச்சர் பதிப்பு இன்னும் சந்தைக்கு வரவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.4,80,000 ஆக இருக்கலாம் என்கின்றனர். இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன், விலையுர்ந்த ஸ்மார்போன்களில் முதலிடத்தில் உள்ளது. 6.39 இன்ச் பெரிய டிஸ்பிளேயுடன் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் இதில் இருக்கலாம். புகைப்படம் எடுப்பதற்கு, அதில் 48MP+13MP+8MP என்ற அளவிலான கேமிராக்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில், அதிக திறன் கொண்ட 4000mAh பேட்டரி இருக்கும். இதற்கு 27W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட சார்ஜர் இருக்கும்.

Lamborghini 88 Tauri

லம்போர்கினி 88 டவுரி ஸ்மார்ட்போனை அதன் தயாரிப்பு விலை நிறுவனம் சுமார் 3,60,000 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில், அதிக வேக செயல்திறனுக்காக Snapdragon 801 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டிஸ்பிளே 5 இன்ச் திரை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம், 3ஜி, 4ஜி, வைஃபை வசதிகளுடன் வருகிறது. இதில், 20MP பின்புற கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா உள்ளது.ஸ்மார்ட்போனை இயக்க, 3400mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Huawei Mate 30 RS 

Huawei Mate 30 RS Porsche Design ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவும் இன்னும் சந்தைக்கு வரவில்லை. விலை சுமார் ரூ.2,14,990 ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் சிறந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுக்காக பெயர் பெற்ற நிலையில், இதில் கிரின் 990 ஆக்டா கோர் சிப்செட் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஹூவாய் போனில் Dual SIM, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC, IR Blaster போன்ற பல சக்திவாய்ந்த மற்றும் சிறப்பான அம்சங்கள் இடம் பெறலாம். இதில் உங்களுக்கு 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை சேமிப்பு இருக்கலாம். இதில் 4500mAh பேட்டரி இருக்கும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை... ஸ்கிரீன் கார்டுகள் உங்கள் ஸ்மார்ட்போனை காலி செய்யலாம்

Huawei Mate X2

உலகின் விலையுயர்ந்த நான்காவது ஸ்மார்ட்போனும் ஹூவாய் நிறுவனத்தின் Huawei Mate X2 மாடல் போன் ஆகும். இதன் விலை விலை ரூ.2,04,999. இதில் Dual SIM, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC போன்ற அனைத்து இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் பெரிய 8 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கும். இது இரட்டை காட்சி ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது Huawei Mate X2 ஒரு மடிக்கக்கூடிய தொலைபேசியாக இருக்கும். ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் 50எம்பி குவாட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனை இயக்க, இது 4500mAh பேட்டரியுடன் வழங்கப்படுகிறது, இது 55W பாஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

Samsung Galaxy Z Fold 6 Ultra

உலகின் மிகவும் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு போன்கள் பட்டியலில் ஐந்தாவது ஸ்மார்ட்போன் தென் கொரிய நிறுவனமான சாம்சங் போன் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் Samsung Galaxy Z Fold 6 Ultra. இது இன்னும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.2 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய Qualcomm செயலி பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சந்தைக்கு வரலாம்.

மேலும் படிக்க | Reliance Jio AirFiber... சிறப்பு சலுகையுடன்... குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News