ரூ. 10 லட்சத்தை விட குறைவான விலையில் அறிமுகம் ஆகவுள்ள 5 கார்களின் பட்டியல்

Upcoming Cars Under 10 Lakhs: ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த பண்டிகை காலத்திலும், ஆட்டோமொபைல் சந்தை நல்ல சலசலப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2023, 05:00 PM IST
  • டாடா மோட்டார்ஸ் அதன் பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
  • இது தற்போது டாடா மோட்டார்ஸின் வெற்றிகரமான கார் ஆகும்.
  • மேலும் இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக உள்ளது.
ரூ. 10 லட்சத்தை விட குறைவான விலையில் அறிமுகம் ஆகவுள்ள 5 கார்களின் பட்டியல் title=

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகவுள்ள கார்கள்: அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கப் போகிறது. பொதுவாக இந்த காலத்தில் மக்கள் உற்சாகமாக ஷாப்பிங் செய்கிறார்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையில், இந்த சீசனில் மிகுந்த உற்சாகம் இருக்கும். இந்த காரணத்திற்காக, பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இந்த நேரத்தை தேர்வு செய்கிறார்கள். 

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த பண்டிகை காலத்திலும், ஆட்டோமொபைல் சந்தை நல்ல சலசலப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை சில புதிய கார்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாந விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம். 

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் மோட்டார் அதன் Xtor உடன் அடுத்த மாதம் மைக்ரோ SUV பிரிவில் நுழையப் போகிறது. இதுவரை வெளிவந்துள்ள நிறுவனத்தின் எஸ்யூவி -களில் இது மிகவும் மலிவான எஸ்யூவியாக இருக்கும். இது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே மக்களால் விரும்பப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. தற்போதைய செக்மென்ட் டாப் காட் டாடா பன்ச் உடன் இது நேரடியாக போட்டியிடும். 

டாடா பஞ்ச் சிஎன்ஜி

ICE இன்ஜின் மூலம் அபரிமிதமான வெற்றியைப் பெற்ற பிறகு, இப்போது டாடா மோட்டார்ஸ் அதன் Punch SUV ஐ சிஎன்ஜி பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்தப் போகிறது. இது ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி உடன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் விற்பனை தொடங்கியுள்ளது. பஞ்ச் சிஎன்ஜி விரைவில் தொடங்கப்படும்.

மேலும் படிக்க | Upcoming SUVs: இன்னும் சில மாதங்களில் ஹுண்டாய் மற்றும் கியா அறிமுகம் செய்யவுள்ள கார்கள்

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்

டாடா மோட்டார்ஸ் அதன் பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது தற்போது டாடா மோட்டார்ஸின் வெற்றிகரமான கார் ஆகும். மேலும் இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக உள்ளது.

டொயோட்டா டெசர்

இந்த கார் மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருக்கும். இது மாருதி-டொயோட்டாவின் கூட்டுத் தயாரிப்பாக வெளியிடப்படும். இதன் வடிவமைப்பு டொயோட்டாவின் உலகளாவிய ஸ்பெக் மாடலான யாரிஸ் கிராஸால் ஈர்க்கப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 ஹேட்ச்பேக் (Hyundai i20 hatchback) காருக்கு எப்போதும் சந்தையில் அதிக தேவை உள்ளது. குறிப்பாக இளைஞர்களால் இந்த கார் அதிகம் விரும்பப்படுகிறது. விரைவில் ஹூண்டாய் அதன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. சோதனையின் போது இது இந்திய சாலைகளில் பல முறை காணப்பட்டது.

கூடுதல் தகவல்

உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.  

- டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
- அவ்வப்போது டயர்களை மாற்றவும்
- டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
- எப்போது கார் டயர்களை மாற்றுவது சரி?

மேலும் படிக்க | உங்களிடம் கார் உள்ளதா? இந்த பார்க்கிங் டிப்ஸ் மிக உதவியாக இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News