சரியாக நெட் கிடைக்கவில்லையா...? உடனே இந்த விஷயங்களை செய்யுங்கள் - பிரச்னை தீரும்

Network Speed In Mobile: மொபைலில் இன்டர்நெட் சரியாக கிடைக்காத போதோ இணையம் முற்றிலுமாக தடைப்பட்டாலோ நீங்கள் வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 26, 2024, 05:55 PM IST
  • இன்டர்நெட் மெதுவாக கிடைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
  • மொபைலிலும் சில பிரச்னைகள் இருக்கலாம்.
  • இந்த 5 விஷயங்களையும் தெரிந்துகொள்வது உங்களுக்கு பயனளிக்கும்.
சரியாக நெட் கிடைக்கவில்லையா...? உடனே இந்த விஷயங்களை செய்யுங்கள் - பிரச்னை தீரும் title=

How To Rectify Network Speed In Mobile: இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாவிட்டால் எதையுமே செய்யா முடியாது. வீட்டில், வேலையில், பொது இடத்தில் என இணையத்தின் உதவியால் தானே நமது அன்றாட வாழ்க்கையே முழுவதுமாக இயங்குகிறது. 

மொபைல் டேட்டா, வீட்டிலும் அலுவலகத்திலும் வைஃபை என ஒவ்வொருவரின் இணைய தேவைக்கும் பல சேவைகள் தற்போது இருக்கின்றன. முந்தைய காலத்தில் 3 நாளுக்கு 100MB டேட்டாவை வைத்துக்கொண்டு, GPRS செட்டிங்ஸ் வாங்கி இணையத்தை பயன்படுத்திய காலம் போய் தற்போது ஸ்மார்ட்போனில் நிமிசத்து 100MB டேட்டாவை செலவழித்து வருகிறோம். 

இணையம் இல்லாவிட்டால் எந்த வேலையும் எப்படி செய்ய முடியாதோ அதேபோல் இணையம் வேகமாக இல்லாவிட்டாலும் எந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியாது. எனவே, ஒவ்வொருவரும் இணையம் வேகமாக இருப்பதை விரும்புவார்கள். இருப்பினும், சில இடங்களில் நெட் கிடைக்கவே கிடைக்காது. அதுவும் அவசரமான சூழலில் இன்டர்நெட் கிடைக்காத போது செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கு காணலாம். 

மேலும் படிக்க | ஆன்லைன் ஷாப்பிங்கில் நல்ல தள்ளுபடியை நீங்கள் எப்படி பெறுவது? டிரிக்ஸ் இதுதான்

ரீஸ்டார்ட் செய்யவும்...

இதைதான் எல்லோரும் சொல்வார்கள் என நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், மொபைலை ரீஸ்டார்ட் செய்வதே பல தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகளுக்கு எளிய தீர்வாக அமையும். அதனால்தான், இன்டர்நெட் கிடைக்காத போது மொபைலை ரீஸ்டார்ட் செய்வதும் உங்களுக்கு உதவும். மொபைலை அணைக்க முடியாத பட்சத்தில் ஏர்பிளேன் மோடை ஆன் செய்து, சிறு வினாடிகள் கழித்து ஆப் செய்தால் இன்டர்நெட் பிரச்னை தீரலாம். 

அப்டேட் பண்ணுங்க

மொபைல் சாஃப்ட்வேரையோ அல்லது மொபைல் செயலியையோ நீங்கள் அப்டேட் செய்யாவிட்டால் கூட இன்டர்நெட் பிரச்னை ஏற்படும். குறிப்பாக, போதுமான இணைய வேகம் கிடைக்காது. அந்த நேரத்தில் உங்களின் மொபைல் சாஃப்ட்வேர் அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இது மொபைலில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும். உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் மூலம்தான் இயங்குகிறதா என்பதை Settings மெனுவில் Software Updates என தேடினால் அந்த ஆப்ஷன் திரையில் காட்டப்படும். அதை கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளலாம். அப்டேட் தேவைப்பட்டால் அப்படியே Update Now ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

செயலிகளின் Cache-வை கிளியர் செய்யுங்கள்

PC மற்றும் லேப்டாப்பை போன்றுதான் மொபைலும்... உங்களின் Cached Data மொபைலின் செயலிகளையும், ஆண்ட்ராய்ட் அமைப்புகளை அதிகம் ஆகிரமித்து, இணைய வேகத்தை கூட மெதுவாக்கலாம். எனவே உங்களின் வெப் பிரௌசர் மற்றும் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளின் Cache-களை உடனடியாக கிளியர் செய்யவும். அதேபோல், பின்னணி பல செயலிகள் செயல்பட்டு வந்தாலும், தேடுபொறியில் பல டேப்கள் திறந்துவைக்கப்பட்டாலும் தேவையற்ற டேட்டா பயன்பாட்டை தவிர்க்கலாம். 

டேட்டா பயன்பாடு

அதிக டேட்டா பயன்பாடு அல்லது பின்னணியில் அதிக செயலிகள் இயங்கிக்கொண்டிருந்தால் உங்களின் இன்டர்நெட் வேகம் குறைந்துவிடும். Settings மெனுவிற்கு சென்று Data Usage ஆப்ஷனுக்கு சென்று எந்த செயலி வழக்கத்தை விட அதிக டேட்டாவை எடுக்கிறது என்பதை சரிபார்க்கலாம். மேலும், சில ஆப்களுக்கு Data Usage கட்டுப்பாட்டை விதிக்கலாம்.

நெட்வோர்க் செட்டிங்

மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் முயற்சித்த பின்னரும் கூட உங்களின் இன்டர்நெட் வேகம் மெதுவாகவே இருந்தால் Network Settings-ஐ ரீசெட் செய்யவும். Settings மெனு சென்று System> Reset> Reset Network Settings ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். நெட்வோர்க் செட்டிங்ஸ்-ஐ ரீசெட் செய்தால் சேமித்து வைத்திருந்த வைஃபை பாஸ்வேர்ட் மற்றும் ப்ளூடூத் கனக்ஷன் ஆகியவை போயிடும். நீங்கள் மீண்டும் அதனை உங்கள் மொபைலுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News