Instant Messaging செயலியான வாட்ஸ்அப் (Whatsapp) இன்னும் சிறிது நாட்களில் மறைந்து போகும் செய்தி அம்சத்தை (Dissapearing Message Feature) அறிமுகப்படுத்த உள்ளது. Whatsapp நிறுவனம் தனது FAQ பக்கத்தில் இந்த அம்சத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் பெயர் குறிப்பிடுவது போல, செய்தியைப் பெற்றவர் அதைப் படித்தவுடன் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் மறைந்துவிடும். இதற்காக, செயலியில் நேர வரம்பை பயனர் தேர்வு செய்யலாம். இந்த அம்சம் தொடர்பாக வாட்ஸ்அப் பணி புரிந்து வருகிறது. பல முறை அம்சம் பீட்டா புதுப்பிப்புகளில் காணப்பட்டது.
Wabetainfo-வின் அறிக்கையின் படி "நீங்கள் ஒரு செய்திக்கு பதிலளிக்கும் போது, ஆரம்ப செய்தி 7 நாட்கள் வரை அங்கே இருக்கும். Disappearing message-ஐ, disappearing message-ஜோடு மற்றொரு chat-ல் ஃபார்வர்ட் செய்தால், அது அனுப்பட்ட chat-ல் மறையாது.”
Whatsapp, மறைந்து போகும் செய்திகளின் சில அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது. பயனர்கள் ஏழு நாட்களில் செயலியைத் திறக்கவில்லை என்றால், காணாமல் போன செய்தி அவர்களுக்குத் தெரியாது. இருப்பினும், whatsapp திறக்கப்படும் வரை message-ன் preview, notification-ல் display ஆகலாம்.
உங்கள் chats மறைவதற்கு முன்பு நீங்கள் backup எடுத்தால், அவற்றை Google Drive-ல் நீங்கள் காணலாம். இருப்பினும், காணாமல் போன செய்திகளை back up-லிருந்து மீட்டெடுக்க நீங்கள் திட்டமிட்டால், உங்களால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது, ஏனெனில் அவை நீக்கப்பட்டுவிடும்.
செய்தியை மறைந்துவிடாமல் சேமிப்பதற்கான மற்றொரு வழி, ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து, அதை சேமிப்பதாகும். பயனர்கள் காணாமல் போன செய்திகளிலிருந்து உள்ளடக்கத்தை காபி பேஸ்ட் செய்யலாம். இருப்பினும், வேறு எதுவும் செயல்படவில்லை என்றால், பயனர்கள் மற்றொரு கேமராவிலிருந்து செய்தியின் படத்தைக் கிளிக் செய்து அதை சேவ் செய்து கொள்ளலாம்.
Whatsapp chat-ஐ மறைக்கும் முறை
இதற்கு, முதலில் உங்கள் வாட்ஸ்அப் அகௌண்டை திறக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் மறைக்க விரும்பும் chat-க்கு செல்லுங்கள்.
அந்த நபரின் chat-ஐ திறக்காமல் சிறிது நேரம் அதை அப்படியே ஹோல்ட் செய்யவும். சில விநாடிகள் கழித்து, மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளுடன், வேறு சில ஆப்ஷன்களும் தோன்றும்.
இந்த ஆப்ஷன்களில் ஒன்று காப்பக (Archive) பொத்தானாகும். இந்த பொத்தானைக் கிளிக் செய்தவுடன் உங்கள் வாட்ஸ்அப் சேட் மறைக்கப்படும்.
மறைக்கப்பட்ட சேட்டை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் வாட்ஸ்அப் சேட்டில் கீழே செல்ல வேண்டும். Archive option கீழே காணப்படும். அதைக் கிளிக் செய்து சேட்டைப் பார்க்கலாம்.
நீங்கள் Archive செய்த chat-ஐ unarchive செய்ய விரும்பினால், அதற்கு நீங்கள் சேட்டைத் திறந்து tap செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் மூன்று புள்ளிகளுடன் Unarchive ஆப்ஷனைப் பெறுவீர்கள். அதை கிளிக் செய்து Unarchive செய்து கொள்ளலாம்.
ALSO READ: நவம்பரில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR